Announcement

Collapse
No announcement yet.

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒர

    பெரியவா எதைச் சொன்னாலும் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கும். நமக்கும் ஒரு பாடம் அதில் புதைந்திருக்கும். சிறு வயதிலேயே துறவறம் ஏற்றுக்கொண்டவருக்கு எங்கிருந்து தான் இத்தனை சித்தியும் ஞானமும் வந்ததோ என்று அவர் மகிமைகளை படிக்கும்போது வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
    ஒரு கிராமத்திலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் தரிசனத்துக்கு வந்தார்கள்.
    கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டு போய்விட்டது. பெரியவாள் வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
    “உங்க கிராமத்துல ஏரி இருக்கா?”
    “இருக்குங்க”
    “அதுல ஜலம் இருக்கா?”
    கிராமத்தார்கள் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள்.
    “பஞ்சாயத்துல தூர் வாரலே…. தண்ணி ரொம்பக் கொஞ்சமா இருக்குங்க”
    “ஏரியில் தண்ணி இருந்தால் எல்லா ஜனங்களுக்கும் சௌகரியம்… ஆடு மாடுகளுக்கும் பயன்படும் இல்லையா?”
    “ஆமாங்க!”
    “முதல்ல ஏரியை ஆழப்படுத்துங்கோ….” என்று சொல்லிவிட்டு பிரசாதம் கொடுத்துவிட்டார்கள்.
    அதாவது “போய் வாருங்கள்” என்று அர்த்தம்.

    வந்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம். “விநாயகர் சிலை தற்சமயம் கைவசம் இல்லை” என்று சொல்லியிருந்தால் கூட சமாதானமாக இருந்திருக்கும்.
    சிலையை பற்றி பேசவே இல்லை.
    ஏரியை ஆழப்படுத்துவது கவர்மெண்ட் வேலை. அதைப் போய் நாம் செய்வானேன்…
    ஆனால் கிராமத்தில் சில வயோதிகர்கள் இருந்தார்கள். “பெரியவங்க சொன்னபடி செய்யலேன்னா அது பெரிய குத்தம், நமக்கு கஷ்டம் வரும்” என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்கள்.
    வேறு வழியில்லை. விலை கொடுத்து வம்பை வாங்கிகொண்டு வந்தாகிவிட்டது.
    இனியும் தாமதப்படுத்துவதில் அர்த்தமில்லை.
    குறிப்பிட்ட நாளில் கிராமத்தினர் ஏற்பாடு செய்த ஆட்கள் மண்வெட்டியும், கூடையுமாக ஏரியில் இறங்கினார்கள்.
    ஒரு மணிநேரத்துக்கு பின் ஒரு ‘டங்’
    “அண்ணே… என்னமோ ஒரு சத்தம்…”
    ஜாக்கிரதையாக கையைவிட்டு துழாவினார்கள்.
    பிள்ளையார். (பின்னமானவர் அல்ல. இவர் ரொம்ப பழமையானவர்)
    அடுத்து ஒரு ‘டங்’. சிவலிங்கம்!
    அடுத்து நந்தி, அம்பாள், முருகன், பலிபீடம், துர்க்கை….
    ஒட்டோட்டமாக காஞ்சிபுரம் வந்தார்கள்.
    நெஞ்சம் குதூகலிக்க பெரியவாளிடம் விண்ணபித்துகொண்டார்கள்.



    “சாமிகிட்டே ஒரு பிள்ளையார் தான் கேட்டோம். ஒரு கோவிலே கிடைச்சிருக்கு.”
    பெரியவாள், “ஏரிக்கரையில் ஒரு கீற்று கொட்டகை போட்டு விளக்கு ஏற்றி, பழங்கள் வைத்து நிவேதனம் செய்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.
    “கோயில்…?” என்று இழுத்தார்கள் கிராமத்தினர்.
    “பிள்ளையார் வந்துட்டாரே… அவர் பார்த்துப்பார்”
    ஏரியில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறார் பிள்ளையார். நாளடைவில் சிவனுக்கு ஒரு அரன் மனை (அரனுக்கு ஒரு மனை – சிவன் கோவில்) கட்டிக்கொடுக்கமாட்டாரா என்ன?
    [நன்றி : ஸ்ரீ மடம் பாலு அவர்கள் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’]
    (ஏரி குளங்கள் போன்றவற்றை தூர்வாருவதற்கு அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் நாமே ஒன்றுபட்டு செய்யவேண்டும் என்று மஹா பெரியவா இதில் உணர்த்தியிருக்கிறார். ஏரி, குளங்களை தூர்வாரி, நீர் நிரம்பும்படி செய்வது மிக்ப பெரிய புண்ணியம். அந்த புண்ணியத்தின் பலனைத் தான் அந்த கிராம மக்கள் அனுபவித்தனர்! சமீபத்தில் கோவைக்கு சென்றிருந்தபோது அங்கு உக்கடத்தில் ஊர் மக்களே ஒன்று சேர்ந்து தூர் வாரிய ஏரியை பார்த்தோம்! கோவை செல்வம் கொழிக்கும் நகராக எதிர்காலத்தில் உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. இப்போது மட்டும் என்னவாம்… என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது. ஓ.கே. ஓ.கே. கோயமுத்தூர்காரங்க கொடுத்து வெச்சவங்க தான்!)
    - See more at: http://rightmantra.com/?p=14433#sthash.mxUI223O.dpuf
Working...
X