PDA

View Full Version : தொடர்ச்சி உதக சாந்திkgopalan37
14-02-2014, 08:53 PM
உதக சாந்தி;
ஆசமனம்;-என்பது காக்கும் கடவுளாம் மஹா விஷ்ணுவை மனதில் இருத்தி சுத்தமான நீரை உட்கொன்டு உள்ளுருப்புகளை சுத்தம் செய்து கொண்டு இறை வயப்படுதல்.பின்னர் கடவுளின் பன்னிரண்டு நாமங்களை போற்றி அவயங்களுக்கு ரக்ஷை இட்டுக்கொள்ளுதல்.

அச்யுதாய நம; அநந்தாய நம; கோவிந்தாய நம; கேசவ, நாராயணா----தாமோதர;

ஹரி;ஓம்; ஶ்ரீ குருப்யோ நம: குருர் ப்ருஹ்மா, குரூர் விஷ்ணு: குரூர் தேவோ மஹேச்வர; குருஸாக்ஷாத் பரப்ருஹ்ம: தஸ்மை ஶ்ரீ குரவே நம: குரவே சர்வ லோகனாம் பிஷஜே பவ ரோகிணாம் நிதயே சர்வ வித்யானாம் ஶ்ரீ தக்ஷிணா மூர்த்தயே நம;

ஸதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம். அஸ்மத் ஆசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்.குரு சரணார விந்தாப்யாம் நமோ நம;

காலையில் ஸ்நானம் செய்து கணவன் மனைவி இருவரும் பஞ்ச கச்சம், மடிசார் மடி உடுத்தி நெற்றிக்கி இட்டுக்கொண்டு . சந்தியா வந்தன , ஜபம் செய்து விட்டு குத்து விளக்கு ஏற்றவும்..

மஞ்சள் தடவிய இரு தேங்காய்களை ஸ்வாமி படத்திற்கு எதிரே வைத்து நமஸ்காரம்.. . பிறகு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் தேங்காய் கொடுத்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லி ஆசி பெறுதல்.

ஆசார்யனையும், ருத்விஜர்களையும் மனைவி பின் தொடர ப்ரதக்ஷிணம் செய்யவும். பூஜை செய்ய வேன்டிய இடத்தி.ல் கிழக்கு நோக்கி நிற்கவும்.

ரித்விஜர்களை பார்த்து அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ மஹாந்தோ அநுக்ருஹணந்து.. ரித்விஜர்கள் மறுமொழி; அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்து.

நின்ற வாறே ஆசார்யனிடம் பவித்ரம், அக்ஷதை பெற்றுக்கொண்டு வலது கை மோதிர விரலில் பவித்ரத்தை போட்டுக்கொன்டு அக்ஷதையை சிறிது தன் தலையிலும், சிறிது மனைவி தலையிலும் போடவும்.

பவித்ரம் தரித்து கொள்ள மந்திரம்: ருத்த்ஸ்யாம ஹவ்யைர் நமஸோப ஸத்ய . மித்ரம் தேவம் மித்ரதேயம் நோ அஸ்து.அனுராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீரா:

நான்கு வெற்றிலை, இரன்டு பாக்கு, பழம், தக்ஷிணை , தேங்காய் அடங்கிய தாம்பாலத்தை எடுத்துக்கொண்டு ருத்விஜர்களை பார்த்து நின்று கொண்டு மனைவி வலது பக்கம் நிற்க வேன்டும். கீழ் வரும் வாக்கியம் சொல்லவும்.

ஹரி;ஓம். நம: சதஸே நம: சதஸ: பதயே நமஸ்சகீனாம் புரோகாணாம் சக்ஷுஷே நமோ திவே நம:ப்ருத்வ்யை. ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ
நம:என்று கூறி அக்ஷதை போட்டு நமஸ்காரம் செய்யவும்.

கையில் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய ஆசாரியனிடம் தாம்பாளத்தை கொடுக்கவும்.

. கணவன், மணைவி, குழந்தைகள். தாயார், தகப்பனார், , அண்ணன்,தம்பி, இவர்கள் மனைவி. குழந்தைகள். இவர்களின் கோத்ரம் பிறந்த நக்ஷத்திரம், பிறந்த ராசி, பெயர், உறவு இவைகளை எழுதி ஆசாரியனிடம் கொடுத்து விடவும்.,

இப்போது ஆசாரியார் சொல்வதை எஜமானன் சொல்ல வேன்டும்.

------------------நக்ஷத்ரே-----------ரா-செள ஜாதஸ்ய-----------சர்மண: மம ----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா;


ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,

ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம

மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹைதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உபநயன) ( சீமந்த)
கர்மாங்கம் ஏபி: ப்ராஹ்மணை : சஹ போதாயந உக்த ப்ராகாரேண உதகசாந்தி கர்ம கர்த்தும் யோக்கியதா ஸித்திம் அநுக்ருஹாண.

பதில்; யோக்கியதா ஸித்திர் அஸ்து.

மனைவி வலது புறம் உட்கார்ந்திருக்க மஞ்சள் பொடியில் பிள்ளயார் பூஜை.;
பிறகு ஆசனத்தில் கீழ் 4 தர்பங்கள் போட்டுக்கொண்டு தர்பேஷ்வாஸீன:

எனச் சொல்லி ஜலத்தை தொட்டு விட்டு கையில் விரல் இடுக்கில் 4 தர்பங்கள் சேர்த்துக்கொன்டு தர்பாந் தாரயமாண என சொல்லி தொடங்கவும்.

கர்த்தா வலது புறம் நின்று கொண்டிருக்கும் தனது மனைவியை இடது புறம் வரச்சொல்லி அவர் கைகளில் தான் வடக்கு புறமாக பார்த்துக்கொன்டு ஜலம் விட வேண்டும்.பிறகு ஆசார்யனிடமிருந்து 6 தர்ப்பை வாங்கி பத்னி கையில் கொடுக்க வேன்டும்.:

மனைவி வலது பக்கமாக அருகில் இருந்து தர்பைகளை கையில் தாங்கிய வாறு தர்ப்பை நுனிகளால் தன் கணவரை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
ஸங்கல்பம் முடியும் வரை எவருடனும் பேசாமல் மந்திரங்களை கூர்ந்து கேட்டு கொன்டிருக்க வேண்டும்.

சங்கல்பம் முடிந்தவுடன் தன் கையில் மூடிக்கொண்டிருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டு விட்டு ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவி கையில் உள்ள தர்பைகளை வாங்கி வடக்கு பக்கம் போட

வேன்டும்.தன் கையால் ஜலத்தை தொட வேன்டும். பிறகு மனைவியை வடக்கு பக்கம் வரச்செய்து அவர் கையிலும் ஜலம் விட வேண்டும். இதன் பின்னரே மனைவி அங்கிருந்து நகர்ந்து செல்லலாம். பிறருடன் பேசலாம்.

வாத்யார் சொல்லும் சங்கல்ப மந்திரங்களை சொல்லவும். சுக்லாம்பரதரம்==
ப்ராணாயாமம்+= மமோ பாத்த சமஸ்த துரிதயத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண; துதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரதஹ் கன்டே

மேரோ; தக்ஷினே பார்ஸ்வே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே சாலிவாஹண சகாப்தே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்சராணாம் மத்யே ----------நாம ஸம்வத் ஸரே
----------- அயனே-----------ருதெள--------மாஸே----------பக்ஷே------------சுப திதெள==--------
வாஸர;--------நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுப கரண யேவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்----------சுபதிதெள

-----------நக்ஷத்ரே-----------ராசெள ஜாதஸ்ய------------சர்மண;மம; ----------நக்ஷத்ரே--------ராசெள, ஜாதாயா;-----------நாம்ந்யா: மம தர்ம பத்ந்யா:
ஸ ப்ராத்ருகஸ்ய ஸ புத்ரகஸ்ய ஆஸ்ரித இஷ்ட மித்ர பந்து வர்க ஸஹிதஸ்ய மம ஸஹ குடும்பஸ்ய , சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்,

ஸர்வாபீஷ்ட, சர்வ ஆனுகூல்ய ஸித்யர்த்தம், வேதோக்த ஆயுர் அபிவ்ருத்யர்த்தம், , ஸமஸ்த அப்யுதய அர்தஞ்ச , தர்மார்த்த, காம

மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த
ஸித்யர்த்தம் மஹதைச்வர்ய அவாப்த்யர்த்தம் அத்ய கரிஷ்ய மான --------(உநனயன)
கர்மாங்கம் உதகசாந்தி கர்ம கரிஷ்யே, ததங்கம் க்ருஹப்ரீதி தாநம் ச கரிஷ்யே. ஜலம் தொடவும்.

விக்னேஷ்வரர் யதாஸ்தானம். க்ருஹ ப்ரீதி தானம். ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயஸ்சமே.

மயா சங்கல்பித உதகசாந்த்யாதி ஆரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ருஹானாம் ஆநுகூல்ய சித்யர்த்தம் யே யே க்ருஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: யே யே க்ருஹா; சுபஸ்தானேஷு

ஸ்திதாஸ்ச தேஷாம் தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப ஏகாதச ஸ்தான பல அவாப்த்யர்த்தம், ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரசாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய; ஸம்ப்ரததே நம: ந மம.

கும்ப ஸ்தாபனம்;
கும்பத்தோடு சஹஜமாக இருக்கும் மண் உடலுக்கு உரிய அம்சம். .அதில் சுற்றப்படும் நூல் எழுபத்து ஈராயிரம் நாடி நரம்புகள். கும்பத்தில் சுற்றப்படும் வஸ்த்ரம் தோல். கும்பத்தில் விடப்படும் நீர் ரத்தம் மற்றும் ஏழு தாதுக்கள்.

கும்பத்துக்குள் இடப்படும் நவரத்தினம் , வெள்ளி, பொன் முதலியவை சுக்கிலம். உள்ளே இடப்படும் கூர்ச்சம் முதுகெலும்பு. மாவிலை=ஜடை; தேங்காய்=கபாலம். ;வெளியே இடப்படும் கூர்ச்சம் ராக்ஷஸர்களை விரட்டும்

குடுமி. நியாஸங்கள், ப்ராணப்ரதிஷ்டை முதலாஃன மந்திரங்கள் ஜீவன்; கீழே பரப்பபடும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆஸனம். உத்தரீய மாலைகள். மலர்கள் முதலியன அலங்கார பொருட்கள்.

பொன், வெள்ளி, பஞ்சலோக, தாமிர, வென்கல, பித்தளை, அல்லது மண் குடம் உபயோகிக்க வேன்டும். கோதுமை, அல்லது நெல் அடியில் பரப்ப வேன்டும். நூல் சுற்றிய சுத்தமான குடத்தை தூபம் காட்டி குடத்தை கவிழ்த்து வைத்து பின்பு நிமிர்த்த வேன்டும். பவித்ரம் வைத்து நீர் நிரப்ப வேண்டும்.

கங்கை முதலான புண்ய நதி தீர்த்தம் பெறப்பட்டு நிரப்பலாம்.. வாசனை திரவியங்கள் ஏலக்காய், கிராம்பு, பச்சை கல்பூரம், விலாமிச்சை வேர். , வெட்டி வேர் இந்த நீரில் இடல் வேன்டும்.

உள்ளே அந்தஹ் கூர்ச்சம் வைக்க படும். ஐந்து வகை மரப்பட்டைகள் உள்ளே வைக்கலாம் .நவரத்தினம், மாந்தளிர், தேங்காய், பதுமை, பட்டு, பூணல்;, அலங்கார கூர்ச்சம், சந்தனம், புஷ்ப மாலை இவற்றை மேலே சார்ர்த்தி அலங்கரிக்க வேன்டும்.

கலசம் வைத்து பூஜிக்க வேண்டிய இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும். . காய்ந்த பிறகு கோலம் போட்டு அதன் மேல் நெல் அல்லது கோதுமை பரப்பி அதன் மேல் வாழை இலை போட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்பவும். இதற்கு ஸ்தன்டிலம் என்று பெயர்.

கீழ் கன்ட மந்திரம் கூறி , ஸ்தண்டிலத்துல் . மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தர்பையால் மூன்று நேர் கோடுகளை வரையவும். நடுக்கோடு: --ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸுருச; வேந ஆவ: ஸ புத்னியா: உபமா அஸ்ய விஷ்டா: