Announcement

Collapse
No announcement yet.

திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

  "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ரூதீயோ அக்னிஷ்டேபதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

  இந்து தர்மத்தை அழிக்க நினைக்கும் சில கூதர்கைகள் மேற்கூறிய திருமண மந்திரத்துக்கு கூறும் கேவலமான அர்த்தம் இதுதான் "திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், இரண்டவதகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தால், முன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள், நான்கவதகத்தான் இப்பொழுது அருகில் இருக்கும் மணமகனுக்கு மனைவியாகிறாள். மணமகள் இதற்குமுன் மூன்று கடவுள்களுக்கும் மனைவியாக இருந்த பின்புதான், நான்காவதாக மணமகனை மணக்கிறாள்"

  ஆனால் இதன் உண்மையான அர்த்தம் இதுவே

  பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவு ம், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம்.
  வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான் . தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி.
  பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள்

  ஆகவே இந்த மந்திரத்தின் அர்த்தம் இவர்களின் மூவரின் அரவனைப்பிள் வளர்ந்த பரிசுத்தமன பெண்னை மனிதனுக்கு அளிக்கிறேன் என்பதே அர்த்தம்

  Krishnam Vande Jagadgurum

 • #2
  Re: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

  ஶ்ரீ:

  காரணங்கள், தனக்குச் சரியென்று தோன்றுபவைகளாகவும்,
  ஆதாரமற்றவைகளாகவும் இருக்கின்றன.
  ஏதோ சமாளிக்க முயல்கிறார்கள் என்று தோன்றுமேயன்றி
  இவற்றால் நாத்திகர்களின் வாதத்தை வெல்ல இயலாது!
  என்.வி.எஸ்.


  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
  Encourage your friends to become member of this forum.
  Best Wishes and Best Regards,
  Dr.NVS

  Comment


  • #3
   Re: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

   Re: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

   ஶ்ரீ:
   நீர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.எதற்கும் உம்முடைய வ்யக்க்யாயமும் பரிந்தால் இரண்டையும் சரி பார்த்து மொத்த அர்த்தத்தையும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்குமே.

   Comment


   • #4
    Re: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

    ஶ்ரீ:

    ப்ரஹ்மாவை வரிப்பது, அக்னி கார்யத்திற்கு தேவையான பாத்திரங்களை சுத்தி செய்வது போன்ற பூர்வாங்க விவாஹ அக்னி கார்யம் ஆனதும் வரன் வதுவைத் தொட்டுக் கொண்டு சொல்லவேண்டிய மந்த்ரம் பின்வருவது.
    கந்யா அபிமந்த்ரணம்
    ஸோம ப்ரதம: ....
    ஏ பெண்ணே! முதலில் உன்னை ஸோமதேவன் அடைந்தான், இரண்டாவதாக விச்வாசு என்னும் கந்தர்வ தேவன் அடைந்தான், மூன்றாவதாக அக்னி உனக்கு பதியானான். (இம் மூன்று தேவர்களும் முறையே பெண்ணுக்குத் தேவையான குணம், இளமை, அழகு இவற்றை அளித்ததாக வேதம் குறிப்பிடுகிறது).
    பிறந்தது முதல் பருவ காலம் வரை ஒரு கன்னிப்பெண்ணுக்கு தேவையான குணம், சாPர லக்ஷ;ணங்களையும், பாதுகாப்பையும், போஷாக்கையும் கொடுக்க முறையே ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களின் அருளால் கிடைக்கப்பெறுகிறது. ஸோமன் (சந்திரன்) குளிர்ந்த மனத்தையும், கந்தர்வன் யௌவனத்தையும் (பருவகால அழகு), அக்னி ஒளிவிடும் ரூபத்தையும் அளித்துவருவதையே நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறாள் என்று கூறுகிறோம்.


    ஸோமோததது கந்தர்வாய ....
    இவளை முதலில் ஸோமன் அநுக்ரஹித்து கந்தர்வனிடம் கொடுத்தான், கந்தர்வன் பிறகு இவளை அக்னியிடம் ஒப்புவித்தான். இப்போது இந்த அக்னிதேவன் இவளையும், புத்ரஸந்தானத்தையும், பரிபாலிக்கத் தேவையான தனங்களையும் எனக்கு அளிக்கவேண்டுமாய் அக்னிதேவனை ப்ரார்த்திக்கிறேன்.
    ஸோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவதைகளை எங்களுக்குத் தேவையான தனங்கள் மற்றும் புத்ர ஸந்தானங்களை அளித்து ஆசீர்வதிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்.


    குறிப்பு:- இந்த மந்திரம்பற்றி ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திர ஸம்பவமும், அதை ஒட்டி நாத்திகர்களால் எழுப்பப்படும் அபவாத்திற்கான ஸமாதானத்தையும் இங்கு காண்போம்.
    நம் பூர்வாசார்யர்களில் ஒருவரான யாமுனாசாரியர் தன் குருவாகிய மஹாபாஷ்யபட்டருக்காக ஆக்கியாழ்வான் என்பவனை எதிர்த்து வாதிடும்போது, அவன் முன்னே, மறுத்து வாதிட இயலாததான 1. உன் தாய் மலடி அல்லள், 2. மஹாராஜா குற்றமற்றவன், 3. மஹாராணி கற்புக்கரசி என 3வாதங்களை வைத்து இவற்றை மறுத்து வாதிட்டால் நீர் வென்றவராவீர் என்றார். ஆக்கியாழ்வானால் முடியாதபோது, மஹாராணியின் உத்தரவுப்படி தானே அவற்றை மறுத்து நிரூபித்தார். 1. 'ஒருமரம் தோப்பாகாது ஒன்றைப்பெற்றவள் தாயாகாள்" என்ற ஆதார வசனத்தைக் கூறி முதலாவதையும், 2. 'குடிமக்களின் குற்றங்கள் கொற்றவனையே சாரும்" என்ற கூற்றால் இரண்டாவதையும், 3. மேற்படி 'ஸோம: ப்ரதம:" என்கிற மந்திரத்தை ஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டு மஹாராணி கற்புக்கரசி அல்ல என்று வாதிட முடியும் என்றும் நிரூபித்து 'ஆளவந்தார்" என்ற பட்டத்தையும் பாதி ராஜ்யத்தையும் பெற்றார் என்பது சுவையான சரித்திர ஸம்பவம்.
    இதே வாதத்தை நாத்திகர்கள் முன்வைத்து, மூவர் மணந்த பெண்ணை நான்காவதாக ஒருவனுக்கு மணம் செய்து வைப்பதாய் ப்ராமணர்கள் ஒரு இழுக்கான ஸம்ப்ரதாயத்தை கையாளுகின்றனர் என்று ப்ரசாரம் செய்கின்றனர்.
    ஒரே ஒரு சிறிய நிகழ்ச்சியின் சிறிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் எதிலும் சரியான நிலைப்பாட்டை எட்ட முடியாது.


    'மாநிலம் சேவடியாக து}நீர்
    வளைநரல் பௌவம் உடுக்கையாக
    விசும்பு மெய்யாக, திசைகள் கையாக
    பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
    இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
    வேதமுதல்வன் என்ப
    தீதறவிளங்கிய திகிரியோனே"
    என்றார் பரம்பொருளைப் பாரதம்பாடிய பெருந்தேவனார் நற்றிணையில்.
    நாத்திகர் நம் வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாவிடினும் சங்க இலக்கியத்தை மறுக்கமாட்டார்கள் என்பதால் இதை இங்கு எடுத்துக்கொண்டோம். ஆகாயம், காற்று, தீ, நீர், நிலமாகிய ஐம்பூதங்களும் பரம்பொருளின் அங்கம். மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் கலவை. அக்நி எனும் தீயைப்போலவே, மதியமாகிய ஸோமனும், கந்தர்வனும் பரம்பொருளின் அங்கமே, கந்தர்வ, ஸோமர்களின் கூறுகள் சேர்வதாலேயே இளமங்கை சோபிக்கிறாள் என்ற கருத்தையே அந்த வேத வாக்கியம் புலப்படுத்துகிறதே அன்றி ஸோம, கந்தர்வ, அக்நியாதிகள் விவாஹம் செய்து, பின் விவாஹரத்து செய்து கொண்ட பெண் என்பதல்ல பொருள்.

    மேலும் இந்த நாத்திகர்கள் கவலைப்படுவதெல்லாம் பெண்ணின் கற்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் இந்த ப்ராஹ்மணர்கள் என்பதுதான். இன்றுவரை சாஸ்த்ரம் கூறுவது, ப்ரயோகம் கூறுவது கந்யை என்று அதாவது பூப்படையாதவள் என்று. பூப்படையாத சிறுமியைத்தான் மூன்று தேவர்களும் தங்கள் அநுக்ரஹத்தால் பூப்படையச் செய்யும் யௌவனத்தை வழங்குகிறார்கள். இதில் கற்பு பற்றி கவலைப்பட ஏதுமில்லை. நாத்திகர்கள் இயற்கையை அஃறிணையாகப் பார்க்கிறார்கள், ஆத்திகர்கள் அவற்றை பல்வேறு தேவதைகளாகப் பார்கிறார்கள். இயற்கையோ, தேவதையோ காரணவஸ்துவுக்கு நன்றி பாராட்டித் துதிப்பது, பொருட்படுத்தாமல் விடுவதைக் காட்டிலும் சாலச்சிறந்ததன்றோ?!
    Source: http://gryhyasutra.blogspot.in/2012/...-bhashyam.html
    என்.வி.எஸ்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #5
     Re: திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

     திருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்

     ஸ்ரீ
     நீவிர் உம்முடைய source லிருந்து விவாதிக்கிறீர்.அதே மாதிரி மற்றொருவர் அவருடைய source லிருந்து விவாதிக்கலாம் அல்லவா.

     இரண்டு source ம் ஓரே முடிவைத்தானே காட்டுகிறது.நீரே "நாத்திகர்கள் இயற்கையை அஃறிணையாகப் பார்க்கிறார்கள், ஆத்திகர்கள் அவற்றை பல்வேறு தேவதைகளாகப் பார்கிறார்கள்".


     இயற்கையோ, தேவதையோ காரணவஸ்துவுக்கு நன்றி பாராட்டித் துதிப்பது, பொருட்படுத்தாமல் விடுவதைக் காட்டிலும் சாலச்சிறந்ததன்றோ?! என்று முடித்து உள்ளீர்கள்.


     இப்போது பலரிடமிருந்து உண்மையான அர்த்தத்தை நாம் எல்லோரும் தெரிந்துகொண்டோம் அல்லவா. அதுதான் முக்கியம் அதை விட்டுவிட்டு விவாதம் எதற்கு.


     ஒரே ஒரு சிறிய நிகழ்ச்சியின் சிறிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் எதிலும் சரியான நிலைப்பாட்டை எட்ட முடியாது என்பதே சரி .

     Comment

     Working...
     X