ஸ்ரீ உ வே என் வி எஸ் ஸ்வாமின் அவர்களுக்கு அடியேன் அநேக தெண்டன் சமர்ப்பித்து விஞ்ஞாபனம் . தாங்கள் ஸ்ரீ பிரியா அம்மையார் அவர்களுக்கு எழுதிய நூல் பார்த்து பரவசம் அடைந்தேன். நாம் இப்போது நமது சமுதாயத்தின் குறைபாடுகளையும் அவலங்களையும் கை கட்டி பார்த்து கொண்டு தான் இருக்கவேண்டுமா . அந்த குறைபாடுகளை எடுத்து சொல்ல கூடாதா அது தவறா ? இந்த சமயத்தில் அடியேனுடைய சதாபிஷேகம் பற்றி எதற்கு பிரஸ்தாபம் . ஏதோ வயதானவன் பிதற்றிக்கொண்டு போகிறான் விடுங்கள் என்று தான் சொல்கிரேர்களே தவிர என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்றுதான் சொல்கிறீர்கள் . இது ஞாயமா ,தர்மமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் . ஏனோ என் நூல் திரிகல் எல்லாம் எதிர்பை சந்திக்கிறதே ஏன் என்று தெரியவில்லை ஸ்வாமின். ஆகையால் அடியேன் விலகி விட முடிவு செய்து அங்கத்தினர் பட்டியலிலிருந்து எனது பெயரை நீக்கிவிட தங்களை பிரார்த்திக்கின்றேன் .இது நாள் வரை அடியேனை தங்கள் சபையில் அனுமதித்த தங்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துகொள்ளும் அடியேன் ...பி.எஸ்.நரசிம்ஹன்.