பெரியவாளின் மேனாவுக்கருகே ஒரு சின்ன பெண் குழந்தை வந்து நின்றது.
பேர் என்ன?
தீபா கீச்சு குரலில் குட்டி கூறியது.
நீ சொன்னது எனக்கு கேக்கலியே! பலமா சொல்லும்மா
அது அழுத்தந்திருத்தமாக D for donkey , E for egg , இன்னொரு E for elephant , P for people ,A for ant என்றது.
பெரியவா பேஷ் பேஷ் மகா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே! என்று ஸ்லாகித்தார். அதுக்கு ஏக மகிழ்ச்சி.
சின்னஞ்சிறுசிடம் பென்னம்பெரியவர் நீ நன்னாதான் சொன்னே ..ஆனா ஒன் பேரோட டாங்கியையும் எக்கையும் சேக்கறதுக்கு பதிலா, நான் இன்னூரு தினுசா சொல்லிதரட்டுமா? .. ரொம்ப ஒசத்தியானவாளோட சேத்து சொல்லித்தரேன்.
D for Devi . தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்ல பாத்திருக்கியோ?
ஒ பாத்திருக்கேன்
I for Ilango
அப்படீன்னா?
இளங்கோ.. ங்கறவர்தான் தமிழ்ல ரொம்ப ஒசத்தியான பொயட்ரிகதை எழுதினவர். அப்பாவை கண்ணகி கதை புஸ்தகம் வாங்கித்தர சொல்லு
P for Prahlada
தெரியும். தெரியும். பக்தியா இருந்த boy , அவனுக்காக God -ஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy -யா இருந்த father -ஐ kill பண்ணினார்
பேஷ் பேஷ் நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே .. கடைசியா, a for anjaneyaa ..தெரியுமா?
உஹூம்
ஹனுமார்
தெரியும். monkey god
Bookmarks