உபநயன ப்ரயோகம்:--
ஆசமனம் பண்ணி பவித்ரம் தரித்து கொண்டு பின் வருமாறு பெரியோர்களிடம் உத்தரவு பெற வேண்டும்.

அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்ப்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய

-----------------நக்ஷத்திரே-----------------ராசெள-ஜாதஸ்ய --------------------சர்மண: அஸ்ய மம குமாரஸ்ய உபநயன கர்ம கர்த்தும் யோக்கியதா ஸித்திம் அநுக்ரஹாண

விக்னேஸ்வர பூஜை செய்யவும். 16 உபசார பூஜை. தர்பையை ஆஸனத்தில் போட்டுகொண்டு கையிலும் தரித்துக்கொண்டு சுக்லாம்பரதரம்======சுபதிதெள
-----------------நக்ஷத்ரே -----------ராசெள ஜாதம் ------------------சர்மாணம் இமம் மம குமாரம் உபநேஷ்யே.

யஜ்ஞோபவீதாதி சுத்தியர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே. என்று சங்கல்பம் செய்துகொண்டு தர்பையை போட்டுவிட்டு ஜலத்தை தொட்டு விக்னேஸ்வரரை உத்வாஸனம் செய்து விட்டு புன்யாஹாவசனம் செய்ய வேண்டும்.

பிறகு குமாரனையும் உபவீதம்=பூணல் முதலியவற்றை ப்ரோக்ஷிக்கவும்.

அசேஷே ஹே பரிஷத் பவத் பாதமூலே மயா சமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய.

--------------நக்ஷத்ரே-----------ராசெள ஜாதஸ்ய---------------சர்மண: அஸ்ய மம குமாரஸ்ய ச்ரெளத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மாநுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்மதேஜோ அபிவ்ருத்யர்த்தம் யஜ்ஞோபவீத தாரண யோக்யதா ஸித்திம் அநுக்ருஹாண.

சுக்லாம்பரதரம்=======++++++=சுப திதெள--------நக்ஷத்ரே------ராசெள ஜாதஸ்ய-----------சர்மண:அஸ்ய மம குமாரஸ்ய ச்ரெளத ஸ்மார்த்த விஹித நித்ய கர்மாநுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம்ப்ரஹ்மதேஜோ அபிவ்ருத்யர்த்தம் யஞ்ஞோப வீதம் தாரயிஷ்யே.

யஜ்ஞோபவீத தாரண முஹூர்த்த-ஸாத்குண்யார்த்தம் யதா சக்தி ஹிரண்ய தானம் கரிஷ்யே. என்று சங்கல்பித்து க்ரஹ ப்ரீதி தானம் செய்யவும்.

மந்திரமில்லாமல் குமாரனுக்கு ஆசமனம் செய்வித்து ஆசாரியன் தன் கைகளையும் குமாரன் கைகளுடன் சேர்த்து பூணலை பிடித்து மந்திரத்தை குமாரனும் கூடச்சொல்லியே தரித்து கொள்ளச்செய்ய வேண்டும்.

யஜ்ஞோபவீதம் இதி அஸ்ய மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி: த்ரிஷ்டுப் சந்த: பரமாத்மா தேவதா. யஜ்ஞோபவீத தாரணே விநியோக: யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே; யத் ஸஹஜம் புரஸ்தாத்.

ஆயூஷ்யம்-அக்ர்யம்-ப்ரதிமுஞ்ச சுப்ரம் யஜ்ஞோபவீதம் பலம் அஸ்து தேஜ:

இவ்வாறு பூணலை தரிப்பித்து மெளனமாக ஆசமனம் செய்விக்க வேண்டும்.
யஜ்ஞோபவீத தாரண முஹூர்த்தம் நல்ல முஹூர்த்தம் என்று ஆசீர்வதிக்கும் படி பெரியோர்களிடம் ப்ரார்த்தனை.. அவர்கள் நல்ல முஹூர்த்தமாக விளங்கட்டும் என்று ஆசீர்வதிப்பர்.


யஜ்ஞோபவீத முஹூர்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த் விதி பவந்தோ அநுக்ரணந்து.
பதில் ஸுமுஹூர்த்தோஸ்து..

குமார போஜனம் வபநம்.:--உப்பு காரம் இல்லாமல் நெய் பால் சேர்த்த அன்னத்தால் ப்ருஹ்மசாரிகளுடன் கூட குமாரனுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். போஜனத்திற்கு முன் ஆசாரியன் தானே காயத்ரியால் அன்னத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும்.

வபனம் செய்து குமாரனுக்கு ஸ்நானம் செய்வித்து சுத்த வஸ்த்ரம், கெளபீனம் உடுத்தி நெற்றிக்கு இட்டு வலது பக்கம் உட்கார்த்தி ஆசாரியன் லெளகீகாக்னியை ப்ரதிஷ்டை செய்து ஆஜ்ய பாகம் வரை செய்து கொள்ள வேண்டும்.

பாத்திர ஸாதனத்தில் தர்ப்பை, ஜலம், கூர்ச்சம், வஸ்த்ரம், அம்மிக்கல், தண்டம், மான்தோல், மேகலை முதலியவற்றை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்.

பிரம்மசர்ய அடையாளங்களை தரித்தல்:-----
ஆஜ்ய பாகத்தின் முடிவில் பலாச ஸமித்தை ஆயுர்தா எனும் மந்திரத்தால் அர்ப்பணம். ஆயுர்தா தேவ ஜரஸம்-க்ருணா ந: க்ருத்ப்ரதீக:-க்ருதப்ருஷ்ட: அக்னே.

க்ருதம் பிபன் அம்ருதம் சாரு கவ்யம்-பிதேவ புத்ரம் ஜரஸே நமேயம் என்று மந்திரத்தை ஆசார்யன் ஆதேஹி என்று சொல்ல மாணவன் ஸமித்தை அக்னியில் அர்ப்பணம் செய்ய வேண்டும்.ஆயுர்தே அக்னய இதம் ந மம

அம்மி மிதித்தல்:----
அக்னிக்கு வடக்கில் மாணவனை கிழக்கு முகமாக நிறுத்தி அம்மி கல்லின் மேல் மாணவனை வலது பாதத்தை வைக்க செய்து இந்த மந்திரத்தை ஆசாரியன் சொல்ல வேண்டும்.

ஆதிஷ்டேமம்..-அச்மானம்-அச்மேவ-த்வம்-ஸ்த்திரோ பவ. அபிதிஷ்ட-ப்ருதன்யத:-ஸஹஸ்வ-ப்ருதனாயத:

எங்கு அம்மி மிதிக்க படுகிறதோ அங்கேயே வஸ்த்ரம், மேகலை, அஜினம் முதலியவற்றை தரிப்பிக்க வே\ன்டும்.

குமாரனை கிழக்கு முகமாக அம்மி கல்லில் நிறுத்தி அவனுக்கு உடுத்த வேண்டிய புது வஸ்த்ரத்தை துதிக்கும் மந்திரம்.

ரேவதீஸ்த்வா வ்யக்ஷ்ணன் க்ருத்திகாச்ச அக்ருத ஸ்த்வா. தியோ அவயன் அவக்ணா: அவ்ருஞ்ஜன் ஸஹஸ்ரம் அந்தான் அபித: அயச்சன். தேவீர்தேவாய பரீதி ஸவித்ரே. மஹத்தத் ஆஸாம் அபவத் மஹித்வனம்.

கீழ் வரும் மூன்று மந்திரங்களை சொல்லி வஸ்த்ரத்தை உடுத்த வேன்டும்.
யா அக்ருந்தன் அவயன் யா அதன்வத-யாச்ச தேவீ; அந்தான் அபித: அததந்த .

தாஸ்த்வா தேவீ: ஜரஸே ஸம்வ்யயந்து-ஆயுஷ்மான் இதம் பரிதத்ஸ்வ்வாஸ:

பரிதத்த வாஸஸைனம் சதாயுஷம் க்ருணுத தீர்கமாயு: ப்ருஹஸ்பதி: ப்ராயச்சத் வாஸ ஏதத் ஸோமாய ராஜ்ஞே பரிதாத வா உ.

ஜராம் கச்சாஸி பரிதத்ஸ்வ வாஸ: பவ க்ருஷ்டீனாம் அபிசஸ்தி பாவா. சதஞ்ச ஜீவ சரத: ஸூவர்ச்சா: ராயச்ச போஷம் உப ஸ்ம்வ்யயஸ்வ.

உடுத்திய பின் சொல்லும் மந்திரம்: பரீதம் வாஸ: அதிதா: ஸ்வஸ்தயே அபூ: ஆபீனாம் அபிசஸ்தி பாவா. சதஞ்ச ஜீவ சரத: புரூசீ: வஸூனீச ஆர்ய: விபஜாஸி ஜீவன்.

மூன்றிழை தர்பையாலாகிய மேகலையை மூன்று தடவை சுற்றி ப்ரதக்ஷிணமாக இடுப்பில் இயம் துருக்காத் என்னும் இரண்டு மந்த்ரங்களால் கட்டி மாணவனையும் மந்திரம் சொல்ல செய்க.

இயம் துருக்தாத் பரிபாதமானா சர்ம வரூதம்புனதீ ந: ஆகாத். ப்ராணா அபாணாப்யாம் பலம். ஆபரந்தி ப்ரியா தேவானாம் ஸுபகா: மேகலேயம். ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்பீ க்னதீ ரக்ஷ: ஸஹமானா அராதீ. ஸா ந : ஸமந்தம் அனு பரீஹி பத்ரயா பர்த்தாரஸ்தே மேகலே மாரிஷாம.

க்ருஷ்ணா ஜினத்தா லாகிய உத்தரீயத்தை மித்ரச்ய ச்க்ஷூ: எ3னும் மந்திரத்தால் அணிய செய்க.

மித்ரஸ்ய சக்ஷூ: தருணம் பலீய: தேஜ: யசஸ்வி ஸ்த்தவிரம்-ஸமித்தம். அநாஹநஸ்யம் வஸனம் ஜரிஷ்ணு:பரீதம் வாஜி அஜினம் ததே அஹம்;
குமாரனும் மந்திரம் சொல்ல வேண்டும்.

அக்னிக்கு வடக்கில் தர்ப்பையை பரப்பி ஆகந்த்ரா எனும் மந்த்ரத்தால் மாணவனை அதன் மேல் மேற்கு நோக்கி நிற்க செய்து குரு தன் அஞ்சலி தீர்தத்தால் அவன் அஞ்சலியில் பிடிக்க சொல்லி ஸமுத்ராதூர்மி எனும் மந்திரத்தால் மும்முறை ப்ரோக்ஷணம் செய்க.

ஆகந்த்ரா ஸம் அகன்மஹி ப்ரஸூம்ருத்யும் யுயோதன. அரிஷ்டா: ஸஞ்சரேமஹி-ஸ்வஸ்தி-சரதாத்-இஹ ஸ்வஸ்தி ஆக்ருஹேப்ய: மாணவனும் இதை சொல்ல வேன்டும்.

ஸமுத்ரா தூர்மி: மதுமான் உதாரத் உபாஸுனா ஸம் அம்ருதத்வம் அச்யாம். இமே நுதே ரச்மய: ஸூர்யஸ்ய யேபி : ஸபித்வம் பிதரோ ந ய: ஆயன்/
ஒரு தடவை மந்திரத்தாலும் இரு தடவை மந்திரமில்லாமலும் மூன்று தடவை ப்ரோக்ஷணம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends