பெண்கள் கடைபிடிக்க வேண்டியவைகள்;
---------------------------------------------------------
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளவை..,

* சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

* இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.

* அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை
ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும். ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல. வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிப்பது சிறந்தது.* பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்கக்கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

* அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும்போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

* கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரிமாறக்கூடாது. வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்ற வார்த்தையை கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்Most Tamil TV Serials have weeping scenes all the time, it may cause bad effects in the home.. This is my humble View.