4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 077/116 மாறன் மறை ஓதார்க்கு திருமால் அன்பு இல்லையே !

திருப்பதி - 71/108. மலை நாடு -13/13 : திருவாறன் விளை

சென்று புனல் மூழ்கிச் செய் தவங்கள் செய்தாலும் ,
வென்று புலன் அடக்கி விட்டாலும் - இன் தமிழால்
மாறன் விளைத்த மறை ஓதார்க்கு , இல்லையே
ஆறன் விளைத் திருமால் அன்பு

பதவுரை :

சென்று புனல் மூழ்கி தீர்த்த யாத்திரை சென்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி
செய் தவங்கள் செய்தாலும் செய்வதற்கு உரிய சிறந்த தவங்களை செய்தாலும்
வென்று புலன் அடக்கி விடடாலும் ஐந்து பொறிகளையும் அடக்கினாலும்
மாறன் இன் தமிழால் நம்மாழ்வார் செவிக்கினிய தமிழ்ப் பாடலால்
விளைத்த மறை ஓதார்க்கு செய்தருளிய வேதத்தை ஓதி உணராதவர்களுக்கு
ஆறன் விளைத் திருமால் திருவாறன்விளையில் இருக்கும் திருமாலின்
அன்பு இல்லையே திருவருள் கிடைக்காது

--
V.Sridhar