Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 093/104 : வேங்கடமே மாவலி பால் இர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • soundararajan50
    replied
    Re: 6. திரு வேங்கட மாலை 093/104 : வேங்கடமே மாவலி பால் இ&a

    "வண்மைப்பேராயிரந்தான் மன்னினான் , மாவலி பால்
    தண்மைப்பேராயிரந்தான் சார்பு"
    ஆகா என்ன ஒரு வார்த்தை ஜாலம்
    Last edited by soundararajan50; 27-02-14, 20:59.

    Leave a comment:


  • 6. திரு வேங்கட மாலை 093/104 : வேங்கடமே மாவலி பால் இர


    பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆய்த் திரிவோர்க்கும் ,

    வேய்க்கும் அணி முத்தி வரும் வேங்கடமே - வாய்க்கு அமுது ஊர்
    வண்மைப்பேராயிரந்தான் மன்னினான் , மாவலி பால்
    தண்மைப்பேராயிரந்தான் சார்பு










    பேய்க்கும் ஒரு பேய் போன்று பேயின் கண்ணுக்கும் பேய் போல தோன்றுமாறு


    பித்து ஆய்த் திரிவோர்க்கும் பைத்தியமாக திரிகிறவர்களுக்கும்
    அணி முத்தி வரும் அழகிய வீடு பேறு கிடைக்குமிடமும்

    வேய்க்கும் மூங்கில்களில்
    அணி முத்தி வரும் அழகிய முத்துகள் கிடைக்குமிடமும் ஆன
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    வாய்க்கு அமுது ஊர் உச்சரிப்பவரின் வாய்க்கு அமுதம் போல் இருக்கும்
    வண்மைப் பேர் ஆயிரம் தான் வளமான ஆயிரம் நாமங்களை
    மன்னினான் உடையவனும் ,
    மாவலி பால் மஹா பலியிடம்
    தண்மைப் பேராய் இரந்தான் எளியவனாய் யாசித்தவனுமான திருமால்
    சார்பு சாருமிடம் ஆகும்

    --

    V.Sridhar
Working...
X