Originally posted by Srivathsan Iyer
View Post
What is your Question in this?!
ரொம்பச் சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்!
எல்லாமே 100 சதவீதம் சரிதான்!
ஆனால்
ஆனால்
ஆனால்
மோக்ஷத்துக்கு போகப்போறோம்கறத்துக்காக
மோர்குழம்பு சாப்பிடமா இருக்க முடியுமா?!
மோர்குழம்பும், வாழப்பூ உசிலி, கத்திரிக்காய் பொடிக்கரமது பண்ணித்தர ஆத்துக்காரிய
ரெண்டு வார்த்தை, ”ரொம்ப நன்னா பண்றியே” ன்னு பாராட்டாம இருக்க முடியுமா?
ஸ்ரீமந் நாராயணன் மோக்ஷத்தை வேண்ணா குடுப்பார் (அது எப்பவோ நடக்கப்போறது)
அதுக்காக மோர்குழம்பும், எண்ணைக் கத்திரிக்காயும் சாப்டறத இன்னிலேருந்து உட்டுட முடியுமா?
“அங்கான்யங்காந்யா: தேவதா:” - ன்னு உபநிஷத் சொல்றது
சிவனும், பார்வதியும், கணேசரும் அந்த நாராயணனின் அங்கங்கள்தான்
அதனால நாங்க அந்த ரூபத்துல நாராயணனை பார்கறோம்னு அவா சொல்றா!
பெருமாளுக்குத் தெரியாதா,
அவா அவாள - அவா அவா போக்குல போவிட்டு
எப்ப, எங்க, எப்படி சேர்துக்கணுமோ அப்ப அப்படி சேர்துப்பார்!
கவலைப்படாதேள்!
---------
கொஞ்சம் ஹாஸ்யமா எழுதறதா நெனைஞ்சுண்டு எழுதியிருக்கேன்
எதானும் தப்பாப்பட்டா, வாய்கு வந்தபடி வைதுவிட்டு மன்னிச்சு உட்டுருங்கோ!
ஸேவிச்சு அபிவாதி பண்ணிக்கறேன்.
தாஸன்.
Leave a comment: