திருமண் ஸ்ரீசூர்ணம் இடும் முறை படங்களுடன்.நெற்றியில் தொடங்கி
நடு வயிற்றில் இரண்டு,
நடு மார்பூ3,
நடுகழுத்தூ4,
வலதூ5,6,7
இடது - 8,9,10
பின்புறம் 11 மற்றும் 12வது
திருமண் காப்பு இடப் பட்டுள்ளதை கவனிக்கவும்.
ஶ்ரீசூர்ணமும் இதே க்ரமத்தில்தான் தரிக்கவேண்டும்.


நெற்றி முதல் நடு பாகம் வரை அடுத்து வலது புறம் இடப்பட்டுள்ளது.
அடுத்து இடது புறம் இடப் பட்டு, அடுத்த படத்தில் பின்புறம் உள்ள இரு இடங்கள் இடப்படுகிறது.
இவற்றை தரிக்கும்போது சொல்ல வேண்டிய பகவன் நாமாக்கள் கீழே இதே க்ரமத்தில் தரப்பட்டுள்ளன.திருமண் காப்பு பவித்ர மந்த்ரம்

உத்தரிணியால் ஜலம் எடுத்து
இடது கையை "ஓம் வீர்யாய அஸ்த்ராய பட்" என்று அலம்பி
"ஓம் ஜ்ஞானாய ஹ்ருதயாய நம:" என்று சிறிது தீர்த்தம் எடுத்துக் கொண்டு
"உத்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேன சத பாஹுநா" என்று திருமண்ணை எடுத்து
"பூமிர் தேனுர்தரணி லோக தாரிணி" என்று ப்ரணவம் சொல்லி கையில் வைத்து
"கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈச்வரீம் ஸர்வ பூதாநாம்
த்வாமிஹோபஹ்வயே ச்ரியம்" என்று குழைத்து மீண்டும் "வீர்யாய அஸ்த்ராய பட்"
என்று ரக்ஷை செய்து "ஓம் க்ஷ்ரெளம்" என்று மந்திரித்து,
"பகவான் பவித்ரம் வாஸுதேவ: பவித்ரம் சததாரம் ஸஹஸ்ரதாரம்
அபரிமிததாரம் அச்சித்ரம் அரிஷ்டம் அக்ஷய்யம் பரமம் பவித்ரம்
பகவாந் வாஸுதேவ: புநாது" என்று பவித்ர மந்த்ரம் சொல்லவேண்டும்.
பின்னர் ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் இட்டுக்கொள்ள வேண்டும்
என்பது சாஸ்திரம் ஒழுங்கு அழகு கருதி ஈர்க்கால் இட்டுக்கொள்ளப் படுகிறது.
படத்தில் காட்டிய வரிசைப்படி கீழ்க்கண்ட நாமாக்களை உச்சரித்து இட்டுக்கொள்ளவும்.

1. கேஸவாய நம:
2. நாராயணாய நம:
3. மாதவாய நம:
4. கோவிந்தாய நம:
5. விஷ்ணவே நம:
6. மதுசூதநாய நம:
7. திரிவிக்ரமாய நம:8. வாமநாய நம:
9. ஸ்ரீதராய நம:
10. ருஷிகேசாய நம:
11. பத்மநாபாய நம:
12. தாமோதராய நம:
பாக்கி உள்ள திருமணை வலது கையாலேயே "வாஸுதேவாய நம:"
என்று உச்சந்தலையில் தடவிக்கொள்வது சிஷ்டாச்சாரம்.

ஸ்ரீசூர்ணம் குழைத்து முன்புபோலவே பவித்ர மந்திரத்தால் ரக்ஷை செய்து கொண்டு
திருமண் இட்ட வரிசையிலேயே ஸ்ரீசூர்ணத்தையும் இடையில் இடவேண்டும்.
அதற்கான தாயார் நாமங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


1. ஸ்ரீயை நம:
2. அம்ருதோத்பவாயை நம:
3. கமலாயை நம:
4. சந்த்ரஸோதர்யை நம:
5. விஷ்ணுபத்ந்யை நம:
6. வைஷ்ணவ்யை நம:
7. வராரோஹாயை நம:
8. ஹரிவல்லபாயை நம:
9. சார்ங்கிண்யை நம:
10. தேவதேவிகாயை நம:
11. ஸுரஸுந்தர்யை நம:
12. மஹாலக்ஷ்ம்யை நம:

முன்பு திருமண் மீந்ததை உச்சந்தலையில் இட்டுக்கொண்டது போல ஸ்ரீசூர்ணம் மீந்ததையும்
உச்சந்தலையில் "ஸர்வாபீஷ்ட பலப்ரதாயை நம:" என்று இட்டுக் கொள்ளவேண்டியது.