அன்ன ப்ராஸனம்.
ஆறாவது அல்லது எட்டாம் மாதம் சாதம் ஊட்டலாம். கர்த்தா ஸ்நானம் செய்து பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆசமனம் செய்து கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு விக்னேஸ்வர பூஜை ஆரம்பிக்கவும்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))
.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
. புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கும்ப ஸ்தாபனம்: பசுவின் சாணியால் மெழுக பெற்ற சதுரமான தரையில் நெல்லை (கோதுமை) பரப்பி அதன் மேல் இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் கீழே கண்ட மந்திரங்களால் கிழ்க்கு நோக்கி மூண்று கோடுகள் வரைய வேண்டும்.
Bookmarks