Announcement

Collapse
No announcement yet.

பெண்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்?

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • பெண்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்?

  Click image for larger version

Name:	radha_krishna.jpg
Views:	1
Size:	86.3 KB
ID:	35381

  பராசக்தி என்று அத்தனை ஆற்றல்களுக்கும் பிறப்பிடமாக ஒருத்தியைச் சொல்கிறோமே! அவளுக்கே ஹ்ரீமதி வெட்க குணம் படைத்தவள் என்று சஹஸ்ரநாமத்தில் பெயர் இருக்கிறது!


  இதிலே ஒரு பெரியவ தத்துவமே உள்ளடங்கியிருக்கிறது. பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறபோது சில பேர் எங்களை ஆக்ஷேபித்து கேட்பார்கள். நீங்கள் சொல்வது உங்கள் சாஸ்திரதுக்கே விரோதமாக இருக்கிறது. சக்தி என்ற வார்த்தையே பெண்பாலாக இருக்கிறது, ஜகத் வியாபாரம் செய்கிற மஹாசக்தியையும் நீங்கள் ஸ்த்ரீ தெய்வமாகத்தான் சொல்கிறீர்கள். ஸ்திரீகள் எல்லாரும் அவளுடைய ஸ்வரூபங்களேதான். தவ தேவீ பேதா: ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகல ஜகத்ஸு என்கிறீர்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவர்களை அடங்கி இருக்கச் சொன்னால் எப்படி? என்று கேட்பார்கள்.


  பதில் என்னவென்றால்: பராசக்தியிடம் அத்தனைசக்தி இருந்தாலும் அணுவுக்குள் உள்ள சக்தியிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றின் சக்தியையும் வெளியில் தெரியாமல் உள்ளே அடைத்து அடக்கிதானே வைத்திருக்கிறாள்? அது மாத்ரமில்லை. இத்தனை ஜகத் வியாபாரமும் பண்ணுகிற தன்னையும் வெளியே காட்டிக் கொள்ளமால் ஒளிந்துகொண்டுதானே இருக்கிறாள்? அதோடு, அவள் மஹாசக்தியாயிருந்த போதிலும், தன சக்தி சக்தி அத்தனையும் அடக்கி ஒடுக்கிக்கொண்டு, ஸதி என்றே பெயர் பெற்ற மஹாபதிவிரதையாகவே பரமேஸ்வரனின் சாந்ததில்தான் தன்னுடைய நிறைவைக் கண்டு அப்படியே சிவசத்யைக்ய ரூபிணியாக ஒன்றிக் கிடக்கிறாள். தான் செய்யும் ஜகத்-வியாபாரம் முழுவதையும் பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம் என்ற பெயரில் ஈஸ்வரனே நடராஜனாகி ஆடிக்காட்டுவதைத்தான் அவள் சிதம்பரத்தில் காட்டி, தான் வெறுமனே பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிற சிவ நடன சாக்ஷி யாக இருக்கிறாள். அதே மாதிரி ஸ்த்ரீகளும் தங்களுடைய சக்தியைத் தாங்களே வெளிக்காட்டாமல், வெளியிலே கொட்டாமல் அதை அடக்கி கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் இன்னும் சோபிதமாக ரேடியட் ஆகும். அதில் சந்தேஹமில்லை. நான் ஏதோ அர்த்தமில்லாமல் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.


  வைஷ்ணவத்தில் ஜகத்வியாபாரம் முழுவதும் செய்கிற சக்தியாக மகாவிஷ்ணுவைச் சொல்லியிருக்கிறது. சாக்தத்தில் சக்தி என்று ஸ்த்ரீயாகச் சொல்லியிருக்கிறதென்றால் வைஷ்ணவத்தில் மகாவிஷ்ணுவை புருஷன் என்றே சொல்லியிருக்கிறது. புருஷ ஸூக்தம் என்றே சொல்கிறது அவரை குறித்துதானே? அதிலே இரண்டாவது அநுவாகதிலே அவருடைய சக்தியை இரண்டு விதமாகப் பிரித்து, இரண்டும் அவருடைய இரண்டு பத்னிகள் என்று சொல்லியிருக்கிறது. ஒரு பத்னி நமக்கெல்லாம் தெரிந்த மஹாலக்ஷ்மி. சாதாராணமாக ஸ்ரீதேவி-பூதேவி என்று சொல்வதில் ஸ்ரீ அவள்தான். வெளியிலே பொங்கிக்கொண்டு தெரிகிற அழகும் அன்புமே ஸ்ரீ அல்லது லக்ஷ்மி. அவளை புருஷ ஸூக்தத்தில் இரண்டாவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படியானால் முதல் பத்னி என்ற பிரதம ஸ்தானம் அந்த ஸுக்தத்தில் நமது மத மூலமான வேதத்திலேயே வருகிற அதாரிட்டி வாய்ந்த ஸூக்தத்தில் எவளுக்குக் கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், ஹ்ரீ என்ற லஜ்ஜா ஸ்வரூபிணிக்கே (வெட்க உருவினளுக்கே) கொடுத்திருக்கிறது! வெளியிலே தெரிவதைவிட சக்தி வாய்ந்ததான உள்ளடங்கிய அழகையும் அன்பையும்தான் அந்த உள்ளடக்கத்தாலேயே இங்கே ஹ்ரீ என்ற வெட்கமாகச் சொல்லியிருக்கிறது!

  சக்தி இருக்கிறது என்பதற்காக அதை ஸ்த்ரீ தெய்வமான ஹ்ரீ, தானே வெளியிலே அவிழ்த்துக் கொட்டவில்லை. புருஷன் என்றே சொல்லப்படும் தன புருஷ தெய்வத்துக்கு அடங்கிய பத்னியாகத் தான் இருந்து கொண்டு அவரே ஜகத் வியாபாரம் செய்யும்படி விட்டிருக்கிறாள்.

  பரப்பிரமத்துக்கு வாசகமாக ஒரு மந்த்ரம் இருக்கிறது. சக்தி பீஜம் என்றே அதைச் சொல்வார்கள். ஆனால் அதுவே வெட்கம் என்பதன் அடியாகப் பிறந்ததாகத்தான் இருக்கிறது! ஹ்ரீ என்றால் வெட்கம் என்று சொன்னேனல்லவா? அந்த அக்ஷரதைக் கொண்டேதான் பராசக்தியின் மந்த்ர ஸ்வரூபம் இருக்கிறது. இதை ஸ்பஷ்டமாகத் தெரிவிற்கிராற்போல் சஹஸ்ரநாமத்தில் அந்த சக்தி பீஜாக்ஷரதைச் சொல்கிற நாமாவுக்கு அடுத்ததாகவே அவளுக்கு ஹ்ரீமதி என்ற நாமாவைக் கொடுத்திருக்கிறது.

  ஆகையினால் ஸ்திரீகளிடம் சக்தி இருப்பது வாஸ்தவந்தான் என்றாலும் அதை அவர்கள் தாங்களே வெளிக்காட்ட வெட்கப்பட்டு, அடங்கி உள்ளே வைத்துக்கொண்டு, அதுவாக புருஷஜாதி மூலம் ரேடியேட் ஆக விடவேண்டும் என்பதுதான் தாத்பர்யம்.


  பெண்களுக்கு வெட்கம் முதலான மேன்மைக் குணங்கள் ஜாஸ்தியாக இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் புருஷர்களைவிட சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். பயப்பட்டு விலவிலத்துப் போவது, துக்க உணர்ச்சியில் குபுகுபுவென்று அழுவது இப்படியெல்லாம் அவர்களுடைய நேச்சர் இருக்கிறது.


  இதெல்லாம் சின்ன அம்சங்கள். பெரிய அம்சங்கள் பரமோத்தமானவை.


  HH Vaariyaar Swamigal says in the Ramayana lecture that had Mother Sita wanted to destroy Lanka, she would have done that within no time. When Lord Anjaneya wanted to destroy, she stops Him also by advising that it would not be a right thing to do as it would reflect bad on Lord Rama.  Source: mahesh
Working...
X