Announcement

Collapse
No announcement yet.

பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்ப

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்ப

  பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் , வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் - வெண்கடுகு

  சாம்பராணி தூபம் அல்லது அதிசய கம்ப்யூட்டர் சம்பராணி - ல தூபம் போடும் பொது கொஞ்சமா வெண்கடுக அதற்குள்ள போட்ட போதும் ( வேற ஏதும் செய்ய வேண்டாம் ) வாசனை வெண்கடுக போட்டதுக்கப்பறம் வேற மாதிரி வரும் , அந்த புகையை வீட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் பரவும் படி செய்தால் போதும் . வெண்கடுகு நாட்டு மருந்து கடைல கிடைக்கும்

  இதை தொடர்ந்து 3 மாதத்திற்கு அல்லது நம்ம பிரச்னை தீரும் வரை நம்பிகையுடன் ( நம்பிக்கை இல்லாமல் செய்து வந்தாலும் ) செய்து வந்தால் போதும் குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும் ,( குடும்பத்தில் எப்ப பார்த்தாலும் ஒருதருகொருத்தர் சத்தம் போட்டுகிட்டு , சண்டை அடிச்கிட்டு , ஒருத்தர ஒருத்தர் திட்டி கிட்டு , தேவையே இல்லாம சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை அடிச்கிட்டு இருக்கிற சூழ்நிலை அப்படியே தலை கீழாக மாறும் .

  இது 100 சதவீதம் எனக்கு ஏற்பட்ட அனுபவ உண்மை  சாய் பாபா உபாசகர் (என் குருநாதர் ) என்னை செய்ய சொன்ன பரிகாரம் இது :

  ஆரம்பத்துல எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை , ஆனாலும் சொல்லிட்டாரே- னு 3 மாசம் சிரமம் பார்க்காம காலைலயும் , சாயந்தரமும் சும்மா 2 நிமிசம் மெனக்கெட்டு செய்தேன், இதுக்குன்னு பெருசா பக்தியோ , பூஜையோ எதுவுமே பன்னால , எப்பவும் போல சாமி கும்பிடரப்ப செஞ்சேன் அவ்வளவுதான் .ஆனா 3 மாசத்துல அப்படியே எல்லாம் தலை கீழா மாறிடிச்சு ,ஒருத்தருகொருத்தர் அன்பா , ஆதரவா , மாறிட்டோம்

  இது எப்படி சாத்தியம் னு குழம்பி தான் போனேன்


  வெண்கடுகு - ல அப்படி என்ன இருக்கு ? அந்த புகை மனோ ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் என்ன மாற்றத்த உண்டு பண்ணுது ? அப்படிங்கற அறிவியல் ஆராய்ச்சிக்குள்ள போக நான் விரும்பலை .ஆன்மிக ரீதியா ஏதோ ஒரு உண்மை
  கண்டிப்பா இருக்கு .


  ஆனா மிக பெரிய அளவில நன்மை ஏற்பட்டிருக்கு -கறது மட்டும் பட்டவர்த்தனமான, மறுக்க முடியாத உண்மை .


  வீட்டில் உள்ள தீய சக்தி எப்படி வெளியேறும் - னு விளக்கம் கொடுத்தார் .


  வெண்கடுகோடா புகை சுட்சமமா வீட்டுக்குள்ள இருக்கற தீய சக்தியோட ( ஏவல், பில்லி சூனியம் , செய்வினை ,குட்டி சாத்தன்,பேய் ,பிசாசு )
  கண்ணுல பட்ட அதால அந்த கண் எரிச்சலை தாங்கவே முடியாதாம் , அதுக்கு (தீய சக்தி களுக்கு) ரொம்ப நேரத்துக்கு கண்ணு தெரியாம போயிடுமாம் , உடனே அந்த வீட்ட விட்டு வெளியே ஓடி போய்டும் ,யாரை பாலோ பண்றது-னு தெரியாம குழம்பி போய்டும் , எந்த வீட்டுல புகை அது கண்ணுல பட்டதோ திரும்ப அந்த வீட்டுக்குள்ள நுழையவே தயங்கும்,பயப்படும்


  செய்து பாருங்கள் , நிச்சயம் 100 சதவிதம் அமைதியும் , நிம்மதியும் வீட்டுல கிடைக்கும் , பிரிந்து சிதறிய குடும்பம் ஒன்று சேரும் . இது சத்தியமான உண்மை .


  http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_16.html

 • #2
  Re: பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்&a

  Dear Padmanabhan Sir,

  Very many thanks. I can tell this remedy to all who have such problems in their family. In todays life this type of problem is common in most of the families.

  With Best Regards

  S. Sankara Narayanan
  RADHE KRISHNA

  Comment


  • #3
   Re: பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும் , குடும்&a

   நானும்தினம் புதிய போஸ்டுகளனைத்தையும் படிக்கிறேன் அப்படியிருந்தும் இந்த போஸ்ட் எப்படி என் கண்னில் படாமல் போயிற்றென்றே தெரியவில்லை.போகட்டும் உண்மையிலேயே மிகமிக உபயோகமான தகவல் இது. ந்ன்றிகள் பலப்பல

   Comment

   Working...
   X