Announcement

Collapse
No announcement yet.

எது சரி ?

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • எது சரி ?

  தலைசுற்றல்!

  கடந்த, 25 ஆண்டுகளாக, அமெரிக்காவில் வாழ்க்கை நடத்தும் எனக்கு, அவ்வப்போது மனதிற்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு, குழந்தைகளை இந்தியாவில் வளர்த்திருக்க வேண்டுமோ என தோன்றும். நான் விளையாடிய இடங்கள், கொண்டாடிய பண்டிகைகள் என, எதுவுமே என் மகன்கள் அனுபவிக்கவில்லையே என, என் மனம் ஏங்கியதுண்டு.


  சமீபத்தில், என் இரு மகன்களுடன் (19 மற்றும் 16வயது) சென்னை வந்தேன். என் முதல் மகன் உடைந்த தமிழ் பேசுவான். சென்னை வந்ததும், மற்றவர்வர்களுடன் பேசிப் பேசி, தமிழ் கற்றுக் கொள்வான் என, மகிழ்ந்தேன். விமானத்திலிருந்து இறங்கி, வெளியே வந்து, பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.


  என் மகன்கள் தமிழ் பேச தெரியாமல் விழிப்பதை பார்த்து, 'ஒண்ணும் கவலைப்படாதீங்க, நாங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவோம்...' என்று, என் குடும்பத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் கூறியதைக் கேட்டதும், இருவர் முகமும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்தது. நானோ தமிழில் பேசச் சொல்ல, 'சீ பாவம் குழந்தைகள்... அவர்களை கட்டாயப்படுத்தாதீங்க...' என்றனர்.
  மொழி, என்னை ஏமாற்றியது.

  என் குழந்தைகள் இட்லி, தோசை, எல்லாம் விரும்பி சாப்பிடுவர். இந்தியா சென்றவுடன், வாரம் இரு முறை ஓட்டல் அழைத்து செல்வதாக கூறியிருந்தேன். ஆனால், இங்குள்ளவர்களோ, 'எப்போதும் இந்தியன் புட் தானா, பீட்சா, பாஸ்தா, பர்கர் சாப்பிடலாம்...' என்றதும், இவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஆக,
  உணவு முறையும் மாறி வருவதை உணர்ந்தேன்.

  அமெரிக்காவில் குழந்தைகளை வளர்க்க பயப்படுவதற்கு முக்கிய காரணம் திருமணம். இந்தியா சென்று, அங்குள்ள பெண்களின் நடவடிக்கை, கலாசாரம் பார்த்து, எதிர்காலத்தில், என் பையன்கள் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பலாம் என்ற நப்பாசையும் இருந்தது.

  புடவை, தாவணி எல்லாம் எப்போதோ போய் விட்டதென்று தெரிந்தாலும், அரைகுறை டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்த பெண்களைப் பார்த்து, அதிருப்தி ஏற்பட்டது என்னமோ நிஜம். இதில், தப்பொன்றுமில்லை என்றாலும், நமக்கே உரிய பாரம்பரிய
  உடை மறைந்தது கண்டு, மனம் லேசாக வலித்தது.

  மேலும், 'பப்பு'களில் எல்லாரும் தண்ணியடிப்பதையும், டான்ஸ் ஆடுவதையும் பார்த்த என் மகன், 'அம்மா, இந்தியா ஒண்ணும், நீ சொன்னது போல் இல்லையே... யு.எஸ்., மாதிரி தான் இருக்கு. ஆனால் சுத்தம்தான் எங்குமே இல்லை...' என்றான்.


  நான் பிறந்து வளர்ந்த இந்தியா எங்கே போனது... நம் தமிழ் மொழி வளம் எங்கே, நம் உணவு, கலாசாரம் என்னவாயிற்று... இது எல்லாம் இல்லை என்ற பட்சத்தில், நான் குழந்தைகளை அமெரிக்காவில் வளர்ப்பதில், குற்ற உணர்வு வேண்டாமோ? தமிழகத்தில் பிறந்த நான், நம் ஊரின் வாசனையையும் விட முடியாமல், அதே சமயம், அமெரிக்க பழக்க வழக்கங்களுக்கும் ஒத்துப்போக முடியாமல் தவிக்கிறேன்.


  - ராஜி கோவிந்தராஜன், பிட்ஸ்பர்க். (
  தின மலர் வார மலர் - 8/12/2013)


  Last edited by sridharv1946; 10-12-13, 14:31.

 • #2
  Re: எது சரி ?

  ஆம். நம் கலசாரம்,மொழி, பாரம்பரிய உணவு வகைகள்,பேச்சுமுறைகள்,எல்லாம் வெகுவேகமாக மாறிக்கொண்டு வருகிறது.மேற்கத்திய நாடுகளை பார்த்து,அவைகளை காப்பி அடிப்பது,
  தாய் மொழியில் பேசுவது கேவலம் என்கிற கருத்து ஆகியவை அதிகமாகிக்கொண்டு வருகிறது.இன்டர்நெட்,டெலிவிஷன் தாக்கம் தெரிகின்றது.திருமணம் தள்ளிப்போடப்பட்டு கூடிவாழும் ( living together) கலாச்சாரம் மெல்ல வேர் ஊன்ற ஆரம்பித்து விட்டது. காதல் திருமணங்கள்( ஜாதி விட்டு ஜாதி) எவ்வளவு அதிகம் ஆகிறதோ.அதேபோல் விவாகரத்துகளும் அதிகம் ஆகின்றன.
  அணு குடித்தனங்களும், பெரியவர்களை விட்டு தனியாக வாழ்வதினால் குழந்தைகளுக்கு நல்லது கேட்டது தெரியாமல் போய்விட்டன. தாய்தந்தை இருவரும் ஆபிஸ் செல்வதால் ஆயாக்கள் வளர்ப்பின் பலன் தெரிகிறது.
  எங்கு போகிறோம் நாம்?
  கூடி வாழ்வோம், தாய்மொழியில் மட்டுமே வீட்டிலாவதுபேசுவோம் என்று முடிவு எடுப்பது ஓரளவு பலன் தரலாம்.
  பணம் தேடுவதில் உள்ள ஈர்ப்பில் கொஞ்சமாவது குழந்தைகளை நம் கலாச்சாரத்தின்படி வளர்ப்போம் என்று முடிவு எடுக்க வேண்டும். அப்போது இவ்வளவு மோசமாக இருக்காது.
  என் மனத்துக்கு பட்டதை சொன்னேன்.
  எவருக்கும் காயத்தை ஏற்ப்படுத்த அல்ல.
  எல்லாம் வல்ல ஈஸ்வரன் உதவட்டும்.
  வரதராஜன்
  Last edited by R.Varadarajan; 10-12-13, 17:45.

  Comment


  • #3
   Re: எது சரி ?

   இந்த ஏக்கம் காலம்காலமாக இருக்கும் இடத்தைவிட்டு இம்மியும் ந்கராத எங்களுக்கே இருக்கும் போது உங்களுக்கு இருப்பதில் வியப்பேஇல்லை சோ வின் எங்கே பிராமணன் என்ற தலைப்பு போல எங்கே ந்ம் கலாச்சாரம் என்று கேட்கத்தான்/தேடத்தான் தோன்றுகிறது

   Comment


   • #4
    Re: எது சரி ?

    scant respect to heritage and traditions;biased notions about scriptures and vedhas;false notion that legends of hoary past are mere superstitions;
    outcome of internet,cinemas and western culture are all the maladies for this state of affairs;
    the panacea for this damage to indian culture is bleak as the stage for redemption is far far far away;

    Comment

    Working...
    X