For "புளி பேஸ்ட் " click here http://www.brahminsnet.com/forums/sh...AE%9F%E0%AF%8D
Ready Made புளியோதரை செய்ய புளி பேஸ்ட் தவிர ஒரு பொடியும் செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.
முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.
தேவையானவை:
500gm தனியா
500gm கடலை பருப்பு
250gm குண்டு மிளகாய்
பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
செய்முறை :
பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
தனி எ எடுத்துவைக்கவும்
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
உங்கள் APP தயார்.
இப்ப புளியோதரை செய்யலாம்.
அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப்
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
மிளகாய் வட்ற்றல்
கறிவேப்பிலை
வேர்கடலை
முந்திரி
செய்முறை:
ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.
புளி பேஸ்ட் போடவும்
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.
சுவையான புளியோதரை ரெடி.
குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போரும். எப்பவேனாலும்
புளியோதரை ரெடி பண்ணிடலாம்.
lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.
Bookmarks