Announcement

Collapse
No announcement yet.

புத்தாண்டு வாழ்த்தும் NVSக்கு பாராட்டும்!

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • புத்தாண்டு வாழ்த்தும் NVSக்கு பாராட்டும்!

  அன்பு நண்பர்களே!
  அனைவருக்கு; என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  இந்த இணைய தளம் துவங்கி மிகக் குறுகிய காலத்தில் (251 நாட்கள் என்று அடிக்குறிப்பில் காணப்படுகிறது) 2069 உறுப்பினர்களை பெற்றிருப்பது
  இந்த இணைய நிர்வாகி திரு.என்.வி.எஸ் அவர்களின் தளராத முயற்சி ஒன்றினால்தான் என்பதை நன்கு அறிய முடிகிறது.
  மொத்தம் பதியப்பட்டுள்ள 1721 பதிவுகளில் அவர் மட்டுமே சுமார் 1025 பதிவுகளை பதிந்துள்ளார் என்பது காணப்படுகிறது.
  எனவே இதனால் பயனடைந்த அனைவரும் குறைந்த பக்ஷம் இந்த புத்தாண்டிலாவது வாழ்த்தி ஒரு செய்தி வெளியிடுவது
  கொஞ்சம் நன்றி அறிதலாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
  அன்புடன்
  தமிழ் ரசிகன்

 • #2
  Re: புத்தாண்டு வாழ்த்தும் NVSக்கு பாராட்டும்!

  இனிய புததாண்டு நல் வாழ்துக்கள்....உங்கள் சேவை தொடரட்டும்....
  வாசுதேவன்

  Comment


  • #3
   Re: புத்தாண்டு வாழ்த்தும் NVSக்கு பாராட்டும்!

   It is one man's relentless efforts that has blossomed this forum into a fruitful and fulfilling mission. I have benefited
   quite a lot at this age of mine and so many have I hope. NVS is easily accessible unlike other forums and answers members queries lucidly and expeditiously and without any ambiguity. He guides us on anushtanams and religious
   practices with video clippings. I wonder if he has reservoir of energy to cater to all the members. He helps us in
   conducting ceremonies at any place in chennai be it marriage or seemantham or upanayanam or sraartham etc.
   at short notice. I have not come across such a selfless person as NVS swamin. May I wish him healthy and peaceful Tamil New Year with bountiful blessings of the Lord of Seven Hills.

   PC RAMABADRAN

   Comment


   • #4
    Re: புத்தாண்டு வாழ்த்தும் NVSக்கு பாராட்டும்!

    Praying God that the Service of this website continue and help the Vipra bhandus always. Rajaganapathy Sarma

    Comment


    • #5
     Re: புத்தாண்டு வாழ்த்தும் NVSக்கு பாராட்டும்!

     ஶ்ரீ:
     அடியேனை---
     பாராட்டி பதிவு செய்த,
     பாராட்ட நினைத்த,
     பாராட்ட விரும்பிய,
     பாரட்டு பதிவை படித்த
     அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
     தயவு செய்து, படிப்தோடு விடாமல்
     படித்ததை, அனுபவித்ததை பகிர்ந்துகொள்ளுங்கள்
     அதுவே அடியேனுக்கு மிகப்பெரிய பாராட்டு.

     எந்தெந்த பதிவை விரும்புகிறீர்கள், எவ்வெவற்றை தவிர்க்க நினைக்கிறீர்கள்
     என்பதெல்லாம் அவ்வப்போது தெரிந்தால்
     மேற்கொண்டு பதிவுகளை முறைப்படுத்த ஏதுவாக இருக்கும்.

     உங்கள் அபிப்ராயங்களை ஒரு மவுஸ் கிளிக்கினால் தெரியப்படுத்த நிறைய வழிகள் தரப்பட்டுள்ளன.
     ஒவ்வொரு பதிவின் கீழும்
     "Nominate" "Thanks" "Comment" "Reply" "Reply with quote"
     இவை நான்கும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வசதியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
     தேங்க்ஸ் பட்டனை ஒரு முறை கிளக் செய்தால் அந்த பதிவை பதிவு செய்தவருக்கு ஒரு நன்றியைத்
     தாங்கள் தெரிவிக்கிறீரக்கள் என்று பொருள். இதனால் தாங்கள் அந்தப் பதிவை விரும்புகிறீர்கள் என அறியலாம்.
     நாமினேட் என்ற பட்டனை கிளிக் செய்து, த்ரட், போஸ்ட், அவதார், யூசர் ஏதாவது ஒன்றை நீங்கள் நன்றாக இருக்கிறது
     என்று சிபாரிசு செய்யலாம். (இதற்கு 2 கிளிக் தேவை)
     கமெண்ட் என்பதை ஒரு முறை கிளிக் செய்தால் ஒரு சின்ன பாக்ஸ் வரும் அதில் தங்கள் கருத்தைப் பதிவு செய்தால்
     அது அந்தப் பதிவோடு ஒட்டிக் கொள்ளும்.
     ரிப்ளை என்பது கீழே உள்ள குயிக் ரிப்ளை என்ற கட்டத்தில் தங்கள் செய்தியை பதிவு செய்வதற்குச் சமம்.
     ரிப்ளை வித் கோட் என்பது உங்கள் பதிலுடன் முன்னால் உள்ள பதிவை ஒரு கட்டத்திற்குள் வைத்து அப்படியே திரும்பப் பதிவாகும்.
     எவ்வளவோ வசதிகள் செய்தாலும் ஏனோ பதிவு செய்ய முன் வருவதில்லை
     அதற்கான காரணத்தை அறிய முடியவில்லை.
     தவிர தற்போது புதிதாக சாட் பாக்ஸ் என்ற ஒன்று இணைத்துள்ளோம்.
     இதன் மூலம் தாங்கள் பதியும் செய்தி ஆன்லைனில் உள்ளவர்கள் அனைவருக்கும் உடனே தெரியும்.
     அவர்களுடன் தமிழ், ஆங்கிலம் எந்த மொழியிலும் உரையாடலாம்.
     அவ்வப்போது போரம் ஹோம் பேஜ்க்கு சென்று பார்த்தால்தான் புதிதாக என்ன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
     என தெரியும்.
     நன்றி,
     என்.வி.எஸ்


     Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
     please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
     Encourage your friends to become member of this forum.
     Best Wishes and Best Regards,
     Dr.NVS

     Comment

     Working...
     X