Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
 • Tamil meaning for Sanskrit words used in shastras

  ஸமஸ்க்ருத வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்கள்!
  அக்நி ஹோத்ரம் ப்ராமஹணர்கள் செய்யும் ஒரு கர்மா
  அகமர்ஷணம் ஓர் ஜபம்
  அர்க்யம் ஜலத்தைக் கையால் எடுத்து மந்திரத்துடன் விடுவது
  அதிக்ராந்தம் காலம் கடந்ததற்கு மேல்
  அத்யயனம் வேதத்தை ஜபிப்பது, கற்பது, ஒழுகுவது
  அதோச்சிஷ்டம் இறக்கும் துருவாயில் ஜல மலம் கழித்தல்
  அநுபநீத: உபநயனம் ஆகாதவன்
  அநுகல்பம் மத்யமாக
  அநுகூலா கணவனுக்கு அனுசரணையாக இருப்பவள்
  அநுமாஸிகம் யோக்யதை பெறுவதற்காக சங்க்ரஹமாக செய்யப்பட்ட மாஸிகங்களை மீண்டும் முறைப்படி செய்வது.
  அநு}டா விவாஹமாஹாத பெண்
  ஆத்யம் (மாஸிகம்) இறந்தவர்களுக்கு 11ம் நாள் செய்யப்படும் முதல் ச்ராத்தம்
  ஆத்யந்தம் ஆரம்பம் முதல் முடிவு வரை
  ஆதித்யாபிமுகம் ஸ_ர்யனைப்பார்த்தபடி
  ஆதாநம் சேர்ப்பது, அக்நி கார்யம் ஆரம்பிப்பது
  ஆப்தீகம் முதல் வருஷமுடிவில் செய்யப்படும் ச்ராத்தம்
  ஆநந்த ஹோமம் இறந்த பத்தாவது தினத்தில் செய்யப்படும் ஒரு ஹோமம்
  ஆமம் அரிசி
  ஆலயம் கோயில்
  ஆவாஹநம் தேவதைகளை வரவழைத்தல்
  ஆவ்ருதாத்யம் இறந்த 11வது நாளில் செய்யப்படும் ச்ராத்தம்
  ஆச்ரம ஸ்வீகார: ஸந்யாஸம் செய்துகொள்வது
  ஆசௌசம் பிறப்பு, இறப்பு தீட்டுக்கள்
  ஆஸ{ரத்துவம் அசுரர்களை அடைதல்
  ஆஸந்தி பாடை
  ஆஹ{தி அக்நியில் மந்திரத்துடன் நெய் அல்லது வஸ்துக்களை சேர்த்தல்.
  இத்மம் (20 அல்லது 17) சமித்துகளை கொண்ட ஒரு கட்டு
  உபநயனம் பூநு}ல் போடும் வைதீக கர்மா
  உபநீத: உபநயனம் ஆனவன்
  உபவீதம் இடது தோளின் மேல் பூநு}ல் இருப்பது
  உபவாஸம் பட்டினிகிடந்து விரதமிருப்பது
  உபாகர்மா ஆவணியவிட்டம் எனும் பூநு}ல்போடும் கர்மா
  உபாயநம் புணு}ல் போடுதல்
  உபாஸநம் தெய்வத்தை தொழுதல்
  உல்லேகனம் கோடுகிழித்தல் (அக்நி சேர்க்கும் முன்)
  உஷத்காலம் விடியற்காலம்

  அந்வஷ்டகா ச்ராத்தம் பண்ணவேண்டிய ஒரு புண்ய காலம்
  அபர விஷயம் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள் விபரம்
  அபஸவ்யம் அப்ரதக்ஷpணம் அல்லது இடதுபுறமாக
  அபராஹ்ணம் 18க்கு மேல் 24 நாழிகைக்குள் ( மதியம் சுமார் 1 க்கு மேல்; 4 மணிக்குள்)
  அங்கவைகல்யம் நெருப்பினால் எரிபடாத தேஹப்பகுதி
  அந்தரிதம் ஒன்றில் அடங்கியது
  அந்தஸ்சவம் க்ராமத்திற்குள் இருக்கும் பிணம்
  அந்நாபிகாரம் அன்னத்தின்மேல் சுத்தத்திற்காக நெய் விடுவது
  ஆகர்ஷணம் கடந்துபோனதை (அதற்காக) செய்வது
  (ஆ)க்ராணம் முகர்தல் (மோப்பம்)
  ஆசமனம் 3 முறை ஜலம் 3 மந்திரத்தால் உட்கொள்வது
  ஆஜ்யாஹ{தி நெய்யினால் மந்திரத்துடன் செய்யப்படும் ஹோமம்.
  ஆத்ம ப்ரதக்ஷpணம் தன்னைத்தானே சுற்றிக்கொள்வது
  ஆத்மசுத்தி: தன்னை சுத்தம் செய்துகொள்வது
  உஷ்ணோதகம் வெந்நீர்
  ஊர்த்வோச்சிஷ்டம் வாந்திசெய்து இறப்பது
  ருஜு சரி (நிரூபி)
  ருதுமதி வயதுவந்தபெண்
  ருதுஸந்தி ருதுகால சேர்க்கை
  ஏகோத்ரவ்ருத்தி ஒன்று அதிகமாதல் (இறந்த பத்து தினத்தில் செய்யப்படும் திலோதகம் ஒவ்வொருநாளும் ஒன்று அதிகமாகும்)
  ஏகோத்திஷ்டம் ஒருவனை உத்தேசித்து ப்ரேதரூபமாகச் செய்யப்படும் ச்ராத்தம்
  ஒளதும்பரம அத்தி
  ஒளரஸ: ஒருவனுடைய பெண்சாதியிடம் பிறந்த பிள்ளை
  கடிசூத்ரம் அரைஞாண் கயிறு
  கண்டாவ்ருதம் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொள்ளுதல்
  கர்த்தா ஒரு கர்மாவைச் செய்பவன்
  கதளீ விவாஹம் வாழைமரத்துக்கு தாலிகட்டுதல்
  கநிஷ்ட: இளையவன்
  கர்மா ஒரு காரியம்
  காம்யம் பலன் கருதி செய்வது
  காஷ்டம் விறகு அல்லது கட்டை
  குக்குடாஸனம் குந்தி உட்காருதல்
  குணபம் பிணம்
  குண்டம் சிறு குழி
  குசம் ஒரு வகை (நாணல்) தர்பம்
  கூபம் கிணறு
  க்ருத்யம், க்ரியை கார்யம்
  க்ருஷ்ணம்ருகம் ஒருவகை மான்
  கேச: கேசம் அல்லது மயிர்
  கோச: புத்தகசாலை
  கட்வாதி கட்டில் முதலானவை
  கனனம் புததைத்தல்
  கர்ப தீக்ஷh பத்திநி கர்பமாக இருக்கும்போது முடி வளர்த்தல்
  கர்பிணி கர்பமாக இருக்கும் பெண்
  க்ரஸ்தாஸ்தமநம் க்ரஹணம் பிடித்து அஸ்தமனமாதல்
  க்ரஸ்தோதயம் க்ரஹணம் பிடித்து உதயமாதல்
  க்ருஹஸ்த: சம்சாரி குடும்பஸ்தன்
  கோசர்ம பசுவின் தோல்
  கோமயம் பசுவின் சாணி
  கோமாம்ஸபக்ஷணம் பசுமாமிசம் சாப்பிடுதல்
  சாந்திரமானம் அமாவாசைக்கு அமாவாசை மாதம் கணக்கிடுதல்
  சௌளம் குடுமி வைத்தல்
  ஜனக பிதா ஸ்வீகாரம் கொடுத்தவனை பெற்ற தகப்பனார்
  ஜனக ப்ராதா பிறந்த வீட்டுச் சகோதரர்கள் (ஸ்வீகாரம் சென்றவனுக்கு)
  ஜனக மாதா பெற்றெடுத்தவள் (ஸ்வீகாரம் எடுத்தவள் மாதா)
  ஜனக ஸபிண்ட: பிறந்தவீட்டின் தாயாதி (பங்காளிகள்)
  ஜநநம் பிறப்பு
  ஜாமாதா மாப்பிள்ளை
  ஜீவ பித்ருக: தகப்பனார் உள்ளவன்
  ஜெஷ்ட: (ஸர்வ ஜ்யேஷ்டன்) மூத்த ஸஹோதரன் (எல்லோரிலும் மூத்தவன்).
  ஜ்யேஷ்டபத்நி மூத்தாள்
  ஜ்ஞாதி தாயாதி (பங்காளி)
  தர்ஜநி ஆள்காட்டி விரல் அல்லது அதில் அணிந்துள்ள மோதிரம்
  தாம்பூலம் வெற்றிலை, பாக்கு
  தாருண்யம் யௌவனம் அல்லது இளமை
  திலோதகம் எள்ளும் ஜலமும்
  திரிபத கண்ட நக்ஷத்திரம் மூன்று பாதத்தோடு முடிகிற நக்ஷத்திரங்கள்
  திரிபக்ஷhதி மூன்றாவது பக்ஷம் வகையறா
  தத்த: ஸ்வீகாரம் போனவன்
  தம்பதி கணவன் மனைவி
  தண்டம் கழி அல்லது கொம்பு
  தர்வி இலை அல்லது அக்நியில் நெய்விட பயன்படுத்துவது
  தசராத்ரம் பத்து இரவுகள்
  தர்சம் அமாவாசை
  தசாஹ: பத்தாம்நாள்
  தஹனம் எரித்தல்
  தஹநாங்கம் கொளுத்துதலின் அங்கம்
  தக்ஷpணாயனம் ஆடி முதல் மார்கழி முடிய 6 மாதம்
  தீக்ஷh முடி வளர்த்தல்
  துக்கப்ப்ரச்னம் துக்கம் கேட்பது
  துர்ம்ருத: துர்மரணமடைந்தவன்
  துஹிதா பெண்
  த்ரவம் திரவப் பொருள்
  தேவகாதம் தேவதைகளால் வெட்டப்பட்டது
  தேவதாந்தரம் சில்லரை தேவதைகள்
  த்வேஷம் பொறாமை, வெறுப்பு
  தௌஹித்ர: பெண்வயிற்றுப் பிள்ளை (பேரன்)
  தௌஹித்ரி பெண்வயிற்றுப் பெண் (பேத்தி)
  தநஹாரி தௌஹித்ர: சொத்தை அடைந்த பெண்வயிற்றுப் பிள்ளை (பேரன்)
  தமநி ஊது குழாய்
  த்வனி சப்தம், ஓசை
  நக்ன: நிர்வாணமாயிருப்பவன்
  நதம் மேற்குமுகமாக போகும் ஆறு
  நதீ ஆறு
  நவச்ராத்தம் இறந்தவர்களுக்கு 1, 3, 5, 7, 9, 11ல் செய்யும் ஒரு ச்ராத்தம்
  நாஸிகா மூக்கு
  நாஸ்திக: தெய்வத்தை இல்லை என்பவன்
  நித்யம் தினமும்
  நிர்மால்யம் அர்சனை செய்து களைந்த பழைய புஷ்பம்
  நியதம் கிளுப்தம்
  நியமம் கட்டுப்பாடு
  நிர்வாபணம் முடிவு
  நிவீதம் பூணலை மாலையாகப் போட்டுக் கொள்வது
  நிஷித்தம் தள்ளத்தக்கது
  நிஷ்காரணம் காரணமின்றி
  நிஷ்பலம் பலனின்றி
  நைமித்திகம் கடமைப்பட்ட கார்யம்
  பக்வம் சமைத்தது (வேகவைக்கப்பட்டது)
  பஞ்சகவ்யம் பசும்பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் சேர்ந்தது
  பர்ணம் இலை

  பத்நீ மனைவி
  பர்யக்நி கர்ணம் அக்நியில் காட்டுவது
  பர்யுஷிதம் பழைமையானது
  பராந்நம் இதரர் வீட்டுச் சாப்பாடு
  பரிதி: அக்நியைச் சுற்றி வைக்கப்படும் ஸமித்து
  பரிமளம் வாசனை வஸ்த்துக்கள்
  பரிஷேசநம் ஜலத்தினால் சுற்றுவது
  பரேஹநி மறுநாள்
  பர்வம் அமாவாசை, பௌர்ணமி
  பக்ஷpணி இரண்டு இரவு ஒரு பகல் அல்லது இரண்டு பகல் ஓர்இரவு
  பாக: சமையல்
  பாத்ராபிகாரம் இலையை நெய்விட்டு சுத்தம் செய்வது
  பாதேயம் இறந்த முன்னோருக்கு வழி பயணத்திற்காக கொடுக்கப்படும் அந்நம்
  பாத்யம் கால் அலம்ப ஜலம் கொடுத்தல்
  பாதுகா பாதரiக்ஷ முதலியன
  பார்வணம் 3 தலைமுறை பித்ருக்களுக்கு அக்நியுடன் செய்யும் ச்ராத்தம்.
  பாவநம் சுத்தம்
  பாஷாணம் கருங்கல்
  பிண்டநிர்வாபணம் பிண்டம் கொடுத்து முடித்தல்
  பிண்டப்ரதானம் பிண்டம் கொடுத்தல்
  பிதா தகப்பன்
  பிதாமஹ: தகப்பனைப்பெற்றவன்
  பிதாமஹீ தகப்பனைப் பெற்றவள்
  பித்ரு தீக்ஷh தகப்பன் இறந்த ஒரு வருடத்திற்கு முடி வளர்த்தல்
  பித்ருபஹிநி அத்தை, தகப்பனின் ஸகோதரிகள்
  பித்ருவ்யன: அப்பா உடன் பிறந்த பெரியப்பா அல்லது சித்தப்பா
  பித்ருசேஷ: ச்ராத்தத்தில் ப்ராம்மணர் சாப்பிட்ட மிச்சம்
  புண்யாஹ: சுத்தத்திற்காக ஜபிக்கப்படும் மந்திரம்
  புத்ர: பிள்ளை அல்லது புத்திரன்
  புத்ரி பெண் மகள்
  புநர் தஹநம் திரும்பவும் எரித்தல்
  பூர்வாஹ்ணம் முற்பகல்
  ப்ரகரணம் புத்தகங்களில் ஒரு பிரிவு
  ப்ரஜா ஜனங்கள்
  ப்ரதிக்ருதி: ஒன்றைப்போல் செய்யப்பட்ட பொம்மை உருவம்
  ப்ரதிகூலா கணவனுக்கு விரோதமாயுள்ள மனைவி
  ப்ரதிக்ரஹம் தானம் வாங்குதல்
  ப்ரதிதினம் தினந்தோரும்
  ப்ரதிநிதி ஒன்றுக்குப் பதிலாக
  ப்ரதிஷ்டா ஒன்றை ஸ்தாபித்தல்
  ப்ரதீக்ஷpதம் ஒன்றை எதிர்பார்த்தல்
  ப்ரபிதாமஹ: தகப்பனின் தகப்பனின் தகப்பன் (கொள்ளு தாத்தா)
  ப்ரபிதாமஹி தகப்பனின் தகப்பனின் தாயார் (கொள்ளு பாட்டி)
  ப்ரபௌத்ர: - ப்ரபௌத்ரீ கொள்ளுப் பேரன் - கொள்ளுப் பேத்தி
  ப்ரவர: வம்ச பரம்பரை
  ப்ரஸக்தி சந்தர்ப்பம்
  ப்ராணாயாமம் மூச்சடக்கிச் செய்யும் மந்திரம்
  ப்ராதக்கால: காலைநேரம்
  ப்ராயஸ்சித்தம் பாபத்துக்குப் பரிஹாரம் செய்தல்
  ப்ராசனம் திரவம் உட்கொள்வது
  ப்ரேதம் உடலற்ற ஆத்மா
  ப்ரோஷித: தேசாந்திரம் போனவன்
  பௌத்ர: - பௌத்ரீ பிள்ளை வயிற்றுப் பேரன் - பிள்ளை வயிற்றுப் பேத்தி
  பலி: ஓர் வித ஆகாரம் கொடுத்தல்
  பர்ஹிர் பூமி கழிவிடம் (மல மூத்திரம் கழிக்க உபயோகிக்கும் இடம்)
  ப்ரம்ஹச்சாரி திருமணமாகாதவன்  Comments 2 Comments
  1. vsubbu48's Avatar
   vsubbu48 -
   very useful info. i suggest that the words may be grouped subjectwise, like aparakaaryam, vivaaham etc. is there provision for typing in Tamil?
  1. bmbcAdmin's Avatar
   bmbcAdmin -
   தமிழில் மிக அழகாக டைப் செய்யலாம். ஈகலப்பை என்று ஒரு மென்பொருள் உள்ளது. அதன் உதவியுடன் டைப்ரைட்டர் கீபோர்ட், பொனடிக் கீபோர்ட், தமிழிழ்நெட்99 என பல வகைகளிலும் டைப் செய்யலாம்.
   முடிந்தால் மீண்டும் அவற்றைத் தாங்களே தங்கள் கருத்துப்படி தொகுத்து அதனடியில் வெளியிடலாம்.
   அவரவர்களால் முடிந்ததைச் செய்தால் இந்த போரத்தை மிக நன்றாக உருவாக்கி மெருகேற்றலாம்.
Powered byvBSocial.com and Block Facebook