Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
  • 108 Divyadesam - 01-Thiruvarangam

    So many websites have been published about the Sri Vaishnava Divyadesams with beautiful photos etc.
    The main difference between those website and ours are:
    They are mostly (almost) Static websites, You can not interact with. You can read and you can even download or save the contents to your comoputer.

    But here you can interact with myself and all other members in this forum, also you can invite your friends and relatives to share your comments also. No need to go any where to discuss about this. Latest information like climate, road conditions, new transportation, new facilities like to have food and accommodation etc. will be published then and there. Your experience and the experience of members and viewers can be updated as a chain to every individual Divyadesam. One chain will provide you almost all the latest information.
    The only requirement is your co-operation to share things here.

    Here I am going to upload videos, maps, audio upanyasam done by Sri Krishnapremi Anna about the particular divyadesam.
    Here I have added an Image, a Video, an Audio for example, members can also use this audi, video, image embedding facility here.


    [CENTER]திருவரங்கம்
    [/CENTER]



    ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேவங்களிலே முதன்மையானதாக 'கோயில்" என்ற சிறப்புப் பெயருடன் விளங்குவதும் காவிரி கொள்ளிட நதிகளின் நடுவே அமைந்திருப்பதுமான இக்கோயில் திருச்சி-விழுப்புரம் கார்டுலைனில் உள்ள ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு கி.மீ. து}ரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து டவுன் பஸ்ஸில் செல்லலாம். இங்கு, சத்திரங்கள், ராமாநுஜ கூடங்கள், சாப்பாட்டு ஹோட்டல்கள் முதலிய எல்லா வசதிகளும் உள்ளன. ( பின்கோடு - 620006)
    [CENTER]

    [/CENTER]


    மூலவர்: ஸ்ரீ ரங்கநாதன் (பெரிய பெருமாள், நம்பெருமாள், அழகிய மணவாளன்) - புஜங்கசயனம் (ஆதிசேஷ சயனத்திருக்கோலம்), தெற்கே திருமுக மண்டலம்.
    உத்ஸவர்: நம்பெருமாள் என்ற சிறப்புப் பெயருடன் நின்ற திருக்கோலம்.
    தாயார் : ஸ்ரீ ரங்கநாயகி (ரங்க நாச்சியார்).
    தீர்த்தங்கள் : சந்த்ரபுஷ்கரிணி, காவேரி, கொள்ளிடம், வேதச்ருங்கம்.
    ஸ்தல வ்ருக்ஷம் : புன்னை.
    விமானம் : ப்ரணவாக்ருதி.
    ப்ரத்யக்ஷம் : தர்மவர்மா, ரவிதர்மன், சந்த்ரன், விபீஷணன்.
    விசேஷங்கள் : தானாகவே உண்டான ஸ்தலங்களாகக் கருதப்படும் எட்டு ஸ்வயம்வ்யக்த Nக்ஷத்திரங்களிலே இந்த Nக்ஷத்திரம் ப்ரதானமானது. (மற்றவை - ஸ்ரீ முஷ்ணம், திருவேங்கடம், சாளக்ராமம், நைமிசாரண்யம், தோதாத்திரி, புஷ்கரம் மற்றும் பத்ரிநாத் ஆகும்.) பட்டர், வடக்குத் திருவீதிப்பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியர், பெரிய நம்பி இவர்களின் அவதாரஸ்தலம். இது தொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவன கைங்கர்யமும் திருமங்கை ஆழ்வார் திருமதில் கைங்கர்யமும் செய்த இடம். ஸ்ரீமந்நாதமுனிகளால் திவ்யப் பிரபந்தத்தை ராகதாளங்களுடன் பாடும் முறை 'அரையர் ஸேவை" என்ற பெயரில் இங்கு நடந்து வருகிறது.

    குறிப்பு : ஸ்ரீ ஸ்வாமி தேசிகனுக்குப் பெரிய பெருமாள் 'கவிதார்க்சிக ஸிம்ஹம்" என்றும், தாயார் 'ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர்" என்றும், விருதுகள் வழங்கிய ஸ்தலம். இப்பெருமானின் பாதுகைகள் மீதுதான் 'பாதுகா ஸஹஸ்ரம்" என்ற உயர்ந்த காவியத்தை ஸ்ரீதேசிகன் இயற்றினார்.

    நம்பெருமாளின் திவ்யாக்ஞையின்படி ஸ்ரீமணவாளமாமுனிகள் இந்த ஸந்நிதியில் திருவாய்மொழி காலNக்ஷபம் ஸாதித்தார். நம்பெருமாள், பகவத் விஷய சாற்றுமறையன்று குழந்தையாக வந்து நின்று 'ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" தனியனை அருளிச்செய்து மணவாள மாமுனிவருக்குப் பஹ{மானமாக அளித்தார். இது ஒரு தனிச்சிறப்பு. இந்த ஸ்தலத்தை பூலோக வைகுண்டம் என்றும் அழைப்பார்கள்.

    ஸ்ரீஅஹோபில மடம் 44வது பட்டம் ஜீயரின் பெருமுயற்சியால் மொட்டை கோபுரத்தின் மேல் 13 நிலைகளையும் 13 கலசங்களையும் கொண்ட 236 அடி கோபுரம் ( உலகிலேயே மிக உயரமான கோயில் கோபுரமாக) கட்டி முடிக்கப்பட்டு, 25.03.1987ல் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. வடக்குப் பக்கப் பரமபத வாசலில் விரஜா நதி இருப்பதாக ஐதீகம்.

    கம்பராமாயண அரங்கேற்றத்தின் போது சிரக்கம்பம் செய்து ஆமோதித்த 'மேட்டு அழசிய சிங்கர்" என்னும் ஸ்ரீநரஸிம்மமூர்த்தி இங்கு கோயில் கொண்டுள்ளார், இந்த இடம் தாயார் ஸந்நிதி நுழைவாசலில் உள்ளது. வேறெங்கும் காணப்படாத ஸ்ரீதன்வந்தரி பகவானின் தனி ஸந்நிதி இங்குள்ளது. இது பரமபத வாசலுக்கு வடக்கிலும், சந்த்ரபுஷ்கரிணிக்கு மேற்கிலும் உள்ளது.

    மற்றும் ஸ்ரீராமர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், நின்ற திருக்கோலத்தில் 20அடி உயரமுள்ள மூலஸ்தான கருடன், ஸ்ரீஉடையவர், தனித்தனியாக அனைத்து ஆழ்வார்கள், ஸ்ரீதேசிகன் இவர்களுடைய ஸந்நிதிகளும் ஸேவிக்க வேண்டியவை. கருடாழ்வார் ஸந்நிதி, இரு பக்கங்களிலும் வேறு எங்கும் காணப்படாத சுக்ரீவன், அங்கதன் ஸந்நிதிகளும் இருக்கின்றன, மூலவர் ரங்கநாதர் கர்ப்பக்ருஹத்தின் மேல் தங்க விமானத்தில் தென்பக்கம் பரவாஸ{தேவர் தங்க விக்ரஹம் உள்ளது. ஸ்ரீரங்கநாதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்பொழுது தங்க விமானத்தையும் பரவாஸ{தேவரையும் ஸேவிக்கும் வழக்கம் உள்ளது.

    நம்பெருமாளை ஸ்ரீராமானுஜருக்கு முற்பட்ட ஆச்சார்யர்கள் ராமானுஜர் ஆழ்வான் ஆண்டான், எம்பார் பட்டர், பிள்ளை லோகாச்சாரியர் முதலிய ஆச்சார்யர்களும் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள். ஸ்ரீராமானுஜர் மலையாள நாட்டு திவ்ய தேசங்கள் தவிர மற்ற திவ்ய தேசங்களை எல்லாம் மங்களாசாஸனம் செய்துள்ளார். அடுத்த பக்கங்களில் வரும் ஐந்து திவ்யதேசங்களும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலேயே உள்ளன. இவை தவிர அருகில் உள்ள மற்ற பிரபல கோயில்கள் : சமயபுரம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, பிக்ஷhண்டார் கோயில்.

    குறிப்பு : 'இக்ஷ;வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்" என்ற பெயரில் இந்த திவ்ய தேசத்தைப் பற்றிய விவரமான ஸ்தலபுராணம் லிப்கோவால் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

    மங்களாசாஸனம் : பத்து ஆழ்வார்களும் ஆண்டாளும் (மதுரகவி ஆழ்வாரைத் தவிர).
    பெரியாழ்வார் : 183, 189, 212, 245, 402-432.
    ஆண்டாள் : 607-616.
    குலசேகராழ்வார் : 647-676, 728.
    திருமழிசையாழ்வார் : 772, 800-806, 844, 870, 2384, 2411, 2717, 2441.
    தொண்டரடிப்பொடியாழ்வார் : 872-926. திருப்பாணாழ்வார் : 927-936.
    திருமங்கையாழ்வார் : 1019, 1213, 1378-1427, 1506, 1571, 1664, 1829, 1978, 2029, 2038, 2043, 2044, 2050, 2062, 2063, 2065, 2069, 2070, 2073-76, 2673 (71), 2674 (118).
    பொய்கையாழ்வார் : 2087. பூதத்தாழ்வார் : 2209, 2227, 2251, 2269.
    பேயாழ்வார் : 2342, 2343. நம்மாழ்வார் : 2505, 3348-58
    மொத்தம் 247 பாசுரங்கள்.
    This article was originally published in blog: 108 Divyadesam - 01-Thiruvarangam started by bmbcAdmin